வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்...!


தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்...!

🌟 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) - 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

🌟 தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்கள், மே மாதம் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பணியின் பெயர் :

வனக்காவலர்

காலிப்பணியிடங்கள் : 465 %2B 99

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினரை கொண்டு 465 காலிப்பணியிடமும், தனியாக மலைவாழ் இனத்தவருக்கு 99 காலிப்பணியிடமும் நிரப்பப்படவுள்ளது.

வயது வரம்பு:

பொது பிரிவினருக்கு வயது தகுதியாக 1.7.2019ம் தேதியில் 21 முதல் 30க்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு(S.S.L.C) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஏதேனும் ஓர் கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:

Rs. 16,600/- to Rs.52,400/-

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

உடல் தரநிலைகள் சரிபார்ப்பு

Endurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக