வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - சங்ககாலம் 010


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - சங்ககாலம் 010

🌟 நாம் வாழும் தமிழகம் மிகத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த வரலாற்றைக் கொண்டதாகும். பண்டையத் தமிழகம் என்றதும் நம் நினைவில் வருவது சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்த சங்ககாலம் ஆகும்.

🌟 சங்ககாலம் என்பது கி.மு 300 முதல் கி.பி 300 வரை நிலவியது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இக்காலத்திலிருந்து பல சிறிய அரசுகளில் சில வலிமைபெற்று, பெரும் அரசுகளாக உருவாகின. வடக்கில் வேங்கடம் என்கிற திருப்பதி முதல் தெற்கில் கன்னியாகுமரி வரையிலும், மற்றும் மேற்கில் அரபிக்கடல் வரையிலும் கிழக்கில் வங்காளவிரிகுடா வரையிலும் சங்ககாலத் தமிழகம் பரவியிருந்தது.

🌟 அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர், ஆதிச்சநல்லு}ர் கல்வெட்டுகள், சாணக்கியரின் அர்த்தசாஸ்த்திரம், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்ககாலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் ஆகும்.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
முச்சங்கம்:

🌟 தமிழகத்தில் மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருந்தன. முதற்சங்கம் இன்று கடலுள் மூழ்கியுள்ள குமரிக் கண்டத்தில் இருந்த தென்மதுரை ஆகும். இது கடல்கோளால் அழிந்தது என்று கூறுவர்.

🌟 இடைச்சங்கம் கடலலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் கடற்கரையை ஒட்டிய மேட்டுப்பாங்கான இடமாகிய கபாடபுரத்தில் அமைக்கப்பட்டது என்றும் இதுவும் கடல்கோளால் அழிந்தது என்றும் கூறுவர்.

🌟 இருமுறை நிகழ்ந்த கடல்கோள்களின் அச்சம் காரணமாக, கடைச்சங்கம் கடற்கரையிலிருந்து வெகுதொலைவில் அமைக்கப்பட்டது. இது இன்றுள்ள மதுரை மாநகரில் அமைந்திருந்தது என வரலாறு கூறுகிறது.

சங்க இலக்கியங்கள்

🌟 சங்ககாலத்தில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்புகள் சங்க இலக்கியங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. எஞ்சியவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நு}ல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழின் அடிப்படை இலக்கண நு}லாகும். இந்நு}ல்கள் மூலமாகச் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள முடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக