ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 012


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 012

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

நுண்ணறிவுச் சோதனைகள்:

🌟 நுண்ணறிவு என்பது தொடர்ந்து வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என பினே கருதினார். வயதிற்கேற்ப நுண்ணறிவு வளரும் தன்மையுடையதால் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வகையில் சோதனைகளை அமைந்துள்ளார்.

🌟 பினேயின் சோதனைகள் மூலம் கீழ்க்காணும் நுண்ணறிவுத் திறன்கள் அளவிடப்படுகின்றன.

🌟 பொது உண்மைகள் பற்றிய அறிவு

🌟 சொற்களுக்குரிய விளக்கங்கள்

🌟 படங்கள், சொற்கள், இவற்றிலுள்ள ஒற்றுமை - வேற்றுமைகள் அறியும் திறன்

🌟 நினைவுத்திறன், எளிய கணக்கறிவு ஆகியன அளவிடப்படுகின்றன.

🌟 எளிய படங்கள் வடிவங்கள் வைத்துச் செய்யும் செயல்திறன்.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
வெக்ஸலர் சோதனை:

🌟 வெக்ஸலர் சோதனையை ஏழு வயது முதல் பதினாறு வயது வரையிலுள்ள மாணவர்களுக்குப் பயன்படுத்தி அவர்களின் நுண்ணறிவை அளவிட முடியும்.

🌟 இவரது நுண்ணறிவுச் சோதனைகளில் இரண்டு வகைச் சோதனைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. ஒன்று சொற்சோதனை மற்றொன்று செயற்சோதனையாகும்.

சொற்சோதனை:

🌟 சொல்வழிச் சோதனைகளில் கிடைக்கும் மதிப்பெண் மற்றும் செயற்சோதனைகளில் கிடைக்கும் மதிப்பெண் ஆகியவற்றை கூட்டிக் கிடைக்கும் மதிப்பெண் ஒருவரின் நுண்ணறிவாக கருதப்படுகிறது.

🌟 இது ஒரு தனியாள் சோதனையாகும். ஒவ்வொரு மாணவராக இச்சோதனையைச் செய்திடுவர். இச்சோதனையை செய்து முடிக்க 1 மணி நேரம் தேவைப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக