சனி, 27 ஏப்ரல், 2019

TET - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 029


TET - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 029

சொற்றொடர் வகைகள்:-

1. கதிரவா வா- எவ்வகைத் தொடர்? - விளித்தொடர்

2. கண்டேன் சீதையை - எவ்வகைத் தொடர்? - வினைமுற்றுத் தொடர்

3. விழுந்த மரம் - எவ்வகைத் தொடர்? - பெயரெச்சத் தொடர்

4. வந்து போனான் - எவ்வகைத் தொடர்? - வினையெச்சத் தொடர்

5. வீட்டைக் கட்டினான் - எவ்வகைத் தொடர்? - வேற்றுமை தொகாநிலைத் தொடர்

6. மற்றொன்று - எவ்வகைத் தொடர்? - இடைச்சொல் தொடர்

7. 'மாமுனிவர்"- எவ்வகைத் தொடர்? - உரிச்சொல் தொடர்

8. 'வாழ்க வாழ்க வாழ்க" - எவ்வகைத் தொடர்? - அடுக்குத் தொடர்

9. மாணவிகள் கலகலவெனச் சிரித்தனர் - இரட்டைக்கிளவி

10. கீழ்க்கண்ட தொடர்களில் எது விளித் தொடர்?

அ) உடைந்த நாற்காலி

ஆ) வந்து நின்றான்

இ) கண்ணா வா

ஈ) வந்தான் இராமன்

விடை : ஊ) கண்ணா வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக