திங்கள், 22 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 013

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

நுண்ணறிவை அளவிடுதல்:

🌟 குழந்தைகளின் நுண்ணறிவை நேரடியாக அளவிடுவது மிகவும் கடினமான செயலாகும். ஒரு குழந்தையின் நுண்ணறிவு அது செய்யக்கூடிய செயலைத் தேர்ந்தெடுக்கும் போக்கு மற்றும் செய்து முடிக்கும் வேகம் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

🌟 ஆகவே, நுண்னறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண்ணறிவு ஈவு எனும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றார்.

நுண்ணறிவு ஈவு

🌟 டெர்மன் என்பவர்தான் முதல் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். ஒருவனுடைய மனவயதுடன் அவனது கால வயதினை ஒப்புநோக்க நுண்ணறிவுத் திறன் அளவைக் குறிப்பிடுவர்.

🌟 மனவயதை காலவயதால் வகுத்து 100ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🌟 நுண்ணறிவு ஈவு (IQ) = மனவயது (மாதங்களில்) / காலவயது (மாதங்களில்) * 100

🌟 100 ஆல் பெருக்குவது நுண்ணறிவு ஈவு பின்னமாக வராமல் முழு எண்ணாக இருப்பதற்காகத்தான்.

🌟 சோதிக்கப்படுபவர் பிறந்து முதல் சோதனை நாள்வரை கணக்கிடப்படுவது கால வயதாகும்.

🌟 மனவயது என்பது சோதிக்கப்படுபவரின் நுண்ணறிவு முதிர்ச்சியைக் குறிக்கும் அளவாகும்.

🌟 ஒரு குறிப்பிட்ட வயதுடையோர் பொதுவாகச் செய்யக்கூடிய செயல்களை வெற்றிகரமாக ஒரு குழந்தை செய்து முடித்தால் அதுவே அக்குழந்தையின் மனவயதாகும். நுண்ணறிவுச் சோதனையின் மூலம் இதனைக் கணக்கிடலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக