ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - கண்டுபிடிப்புகள்
🌟 நெருப்பு, ஏர், சக்கரம் போன்றவை முக்கிய கண்டுபிடிப்புகள் ஆகும். இவை மனித நாகரிக வளர்ச்சியால் கிடைத்த பயன்மிக்கக் கண்டுபிடிப்புகளாகும்.
நெருப்பு:
🌟 ஆதிமனிதன் காட்டில் சுற்றித் திரியும் பொழுது மூங்கில்கள் ஒன்றொடொன்று உரசி அதிலிருந்து தீப்பொறி உண்டாவதைக் கண்டான். அந்தப் பொறியினால் இலைச்சருகுகள் குச்சிகள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு பயந்து ஓடினான்.
🌟 தீ அணைந்த பின்பு அத்தீயில் வெந்து கிடந்த விலங்குகளின் மாமிசத்தைச் சுவைத்துப் பார்த்தான். பிறகு, சிக்கி முக்கி எனப்படும், ஒரு வகைகற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் பொழுது தீப்பொறி உண்டாவதைக் கண்டுகொண்டான்.
🌟 வேட்டையாடிய விலங்குகளை வேகவைக்கவும், இரவில் ஒளி பெறுவதற்கும், குளிர் காய்வதற்கும், மேலும் கொடிய விலங்குகளை அஞ்ச வைத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் நெருப்பைப் பயன்படுத்தினான்.
🌟 இது அவன் கண்டுபிடித்த மிக முக்கிய கண்டுபிடிப்பாகும். மனித குலத்தின் முன்னேற்றத்தில் இது ஒரு மைல் கல் எனலாம்.
ஏர்:
🌟 விவசாய நிலத்தை உழுது பயிர் செய்ய மனிதன் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைத்த கருவி ஏர். இது கலப்பை என்றும் அழைக்கப்படுகிறது.
🌟 நிலத்தை உழுது, பண்படுத்தி விதைக்க ஏற்றதாய் ஆக்கித் தருவதில் ஏர்க்கலைப்பையின் பங்கு முதன்மையானதாகும்.
ஏர் உருவான கதை:
🌟 நிலத்தைக் கிளறுவதற்கு முதலில் கூர்மையான கற்களை, விலங்குகளின் எலும்புகளைப் பயன்படுத்தினான். பின்னர் மரங்களிலிருந்து கிடைத்த வளைந்த அமைப்புடைய கூர்மையான மரக்கட்டையை உழுவதற்குப் பயன்படுத்தினான்.
🌟 நாளடைவில் நாய், குதிரை, மாடு, கழுதை போன்ற விலங்குகளைப் பு%2Bட்டி இக்கலப்பையைப் பயன்படுத்தினான். உழவு செய்வது சுலபமாக இருந்ததை உணர்ந்தான்.
🌟 மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி ஏர் ஆகும். இரும்பைக் கண்டறிந்த பிறகு மரக்கட்டையுடன் இரும்மைப் பொருத்தி நிலத்தை ஆழமாகவும் விரைவாகவும் உழவுசெய்யக் கற்றுக் கொண்டான். இந்த எளிய கருவியே கலப்பை எனலாம். கலப்பை உணவு உற்பத்தியை துவக்க உதவியது.
🌟 முதல் ஏர் நமது தமிழ்நாட்டில் தான் உபயோகத்தில் இருந்தது என ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர். இதனை நன்கோள் என்று கூறுவர். நன் - எருது, கோள் - அதனை இயக்குபவர் என்ற பொருள்படும்.
சக்கரம் உருவான கதை:
🌟 ஆதி மனிதர் தாம் வேட்டையாடிய விலங்குகளை, அங்கிருந்து தாம் வாழுமிடங்களுக்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டனர், தாவரக் கொடிகளால் கட்டி இழுத்துச் சென்றனர்.
🌟 நாளடைவில் மரக்கட்டைகளை அடுத்தடுத்து வைத்து அடுக்கி அதன் மேல் பொருட்களை வைத்து உருட்டிச் சென்றனர். மேடுகளிலிருந்து உருளும் வடிவிலுள்ள பொருள்கள் எளிதாக தானே உருண்டு செல்வதைக் கண்டனர்.
🌟 உருளும் வடிவமைப்பின் தொடர் வளர்ச்சியே சக்கரத்தின் முதல் வடிவமானது. நாளடைவில் தேவைக்கேற்ப விதவிதமாகச் சக்கரங்கள் உருவாக்கப்பட்டன.
🌟 சக்கரங்கள் நடுவில் துளையிடப்பட்டு ஓர் அச்சில் சுழகின்றன. சக்கரம் புதிய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக