TET தேர்வு 2019,பொது அறிவு - காந்தவியல் தொடர்பான வினா விடைகள் 001.
1. காந்தத் தன்மை உள்ள பொருள்கள் எவை? - இரும்பு, கோபால்ட், நிக்கல்
2. காந்தத்தன்மையற்ற பொருள்கள் எவை? - காகிதம், நெகிழி
3. ஒரு காந்தத்தை தொங்கவிட்டால், எத்திசையை நோக்கி நிற்கும்? - வடக்கு, தெற்கு
4. காந்தத்தின் திசை காட்டும் பண்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது ............... - காந்த ஊசிப்பெட்டி.
5. காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ............ - ஈர்க்கும்.
6. காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று .............. - விலக்கும்.
7. ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப்பெரிய இராட்டினங்களை இயக்க ................. தேவை. - மின் காந்தங்கள்
8. 1600-ல் புவி மிகப்பெரிய காந்தமாகச் செயல்படுகிறது என்பதை அறிவித்தவர் யார்? - வில்லியம் கில்பர்ட்
9. காந்த ஊசியைப் பயன்படுத்தி ............... அறிந்து கொள்ள முடியும். - திசையை
10. காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்க காரணம் - சுத்தியால் தட்டுதல், வெப்பப்படுத்துதல்
11. மாக்னடைட் ஒரு ........... காந்தம். - இயற்கை
12. மின்காந்த தொடர்வண்டியை பிரான்ஸ் நாட்டில் ......... என அழைக்கப்படுகிறது. - பறக்கும் தொடர்வண்டி
13. காந்தம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்? - ஆசியா
14. இயற்கை காந்தத்தின் வடிவம் - வடிவமற்றது
15. மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை அளித்தவர்கள் - சீனர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக