TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள்
1. ஒரு விளையாட்டுத்திடல் செங்கோணமுக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ. திடலில் சிமென்ட் பு%2Bச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்க.
விடை: ரூ.10000
விளக்கம்:
சிமென்ட் பு%2Bச ஆகும் மொத்த செலவைக் காண, விளையாட்டுத்திடலின் பரப்பளவைக் கண்டு அதை ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவிடன் பெருக்கினால் போதுமானது.
செங்கோண முக்கோண விளையாட்டுத்திடலின் பரப்பளவு = 1/2 * b * h
இங்கு b, h என்பன செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்களாகும்.
= 1/2 * (50 * 80)
= 2000 ச.மீ.
ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.5
ஃ 2000 சதுர மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.50 * 2000
= ரூ.10000
2. 60மீ நீளமுடைய சதுரவடிவ மனையை அறிவு வாங்கினார். அந்நிலத்திற்கு அடுத்த 70மீ * 50மீ அளவுடைய செவ்வக வடிவ மனையை அன்பு வாங்கினார். இருவரும் ஒரே விலைக்கு வாங்கினார்கள் எனில் இலாபம் அடைந்தவர் யார்?
விடை: லாபம் அடைந்தவர் அறிவு.
விளக்கம்:
அறிவு வாங்கிய சதுர வடிவ மனையின் பரப்பளவு = 60 * 60 = 3600 மீ2
அன்பு வாங்கிய செவ்வகவடிவ மனையின் பரப்பளவு = 70 * 50 = 3500 மீ2
இங்குச் சதுர வடிவ மனையின் பரப்பளவு செவ்வக வடிவ மனையின் பரப்பளவை விட அதிகமாக உள்ளது.
எனவே, லாபம் அடைந்தவர் அறிவு.
3. 40மீ உயரம் கொண்ட ஒரு முக்கோண வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 800 ச.மீ. அதன் அடிப்பக்கத்தின் நீளத்தைக் காண்க.
விடை: 40மீ.
விளக்கம்:
முக்கோண வடிவத் தோட்டத்தின் பரப்பளவு = 800ச.மீ
உயரம் (h) = 40மீ
1ஃ2 * டி * h = 800
1ஃ2 * டி 40 = 800
20 டி = 800
டி = 40மீ.
ஃ அடிப்பக்கத்தின் நீளம் 40மீ.
http://bit.ly/2IZoRml
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக