ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள்


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள்

1. அடிப்பக்கம் 9 செ.மீ., குத்துயரம் 5 செ.மீ. உடைய இணைகரம் ஒன்றின் பரப்பளவைக் காண்க.

விடை: 45 செ.மீ2

விளக்கம்:

b = 9 செ.மீ, h = 5 செ.மீ. எனத் தரப்பட்டுள்ளது.

இணைகரத்தின் பரப்பளவு = b * h

= 9 * 5

ஃ இணைகரத்தின் பரப்பளவு = 45 செ.மீ2
2. ஓர் இணைகரத்தின் பரப்பளவு 56 செ.மீ2. அதன் குத்துயரம் 7 செ.மீ எனில் இணைகரத்தின் அடிப்பக்கம் என்ன?

விடை: 8 செ.மீ.

விளக்கம்:

பரப்பளவு = 56 செ.மீ2, குத்துயரம் h = 7 செ.மீ எனத் தரப்பட்டுள்ளது.

இணைகரத்தின் பரப்பளவு = 56

டி * h = 56

டி * 7 = 56

டி = 56ஃ7 = 8 செ.மீ.

ஃ இணைகரத்தின் அடிப்பக்கம் = 8 செ.மீ.
3. அடிபக்க அளவு 15 செ.மீ, குத்துயரம் 10 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

விடை: 150 செ.மீ2

விளக்கம்:

அடிப்பக்கம் = 15 செ.மீ, குத்துயரம் = 10 செ.மீ எனத் தரப்பட்டுள்ளது.

சாய் சதுரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் * குத்துயரம்

= 15 செ.மீ * 10 செ.மீ.

ஃ சாய் சதுரத்தின் பரப்பளவு = 150 செ.மீ2.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக