வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 , அறிவியல் - விலங்கு செல் - செல்லின் நுண்ணுறுப்புகள் - 001.

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 ,
அறிவியல் - விலங்கு செல் - செல்லின் நுண்ணுறுப்புகள் - 001.

பிளாஸ்மா படலம்(Plasma membrane) :

🌟 செல்லைச் சுற்றியுள்ள படலம்.

🌟 செல்லுக்கு வடிவத்தை கொடுக்கிறது.

🌟 செல்லுக்குள் தேவையானவற்றை மட்டும் அனுமதிக்கும் தேர்வு கடத்தி சவ்வாக செயல்படுகிறது.

புரோட்டோபிளாசம்(Protoplasm) :

🌟 பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ்மம் போன்ற பொருளே புரோட்டோ பிளாசமாகும்.

🌟 சைட்டோபிளாசம் மற்றும் செல்லின் உட்கரு ஆகியவை இதனுள்ளே அடங்கியுள்ளது.

🌟 புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் J.E. பர்கின்ஜி என்பவராவார். புரோட்டோ என்றால் முதன்மை என்றும் பிளாஸ்மா என்றால் கூழ்மம் என்றும் பொருள்படும்.

சைட்டோபிளாசம்(Cytoplasm) :

🌟 பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதியே சைட்டோபிளாசமாகும்.

🌟 செல்லின் உட்கருவைப் பாதுகாக்கிறது.

உட்கரு(Nucleus) :

🌟 செல்லின் முக்கியப் பகுதியாகும்.

🌟 செல்லின் நடுவில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

🌟 உடல் வடிவத்தை தீர்மானிப்பது. கோள வடிவமுடையது.

🌟 உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியு%2Bக்ளியோலஸ்) மற்றும் குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியன இதனுள் அடக்கமாகும்.

🌟 அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது இதன் முக்கிய பணியாகும்.

மைட்டோகாண்ட்ரியா(Mitochondrion) :

🌟 செல்லின் சுவாசம் நடைபெறும் பகுதி உணவுப் பொருளை ஆற்றலாக மாற்றுகிறது.

🌟 செல்லின் ஆற்றல் மையங்கள் என்றழைக்கப்படுகிறது.

கோல்கை உறுப்புகள்(Golgibodies) :

🌟 செல்லிற்குள் வலைபின்னல் போன்ற குழல்களாக இருக்கும்.

🌟 செல்லுக்கு வலுவை கொடுக்கிறது.

🌟 உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரக்கிறது.

ரிபோசோம்கள்(Ribosomes) :

🌟 செல்லின் புரதத் தொழிற்சாலை என்றழைக்கப்படுகிறது.

🌟 புரதத்தை உற்பத்தி செய்வது தான் இதன் முக்கிய வேலை.

லைசோசோம்கள்(Lysosomes) :

🌟 செல்லினுள் உருண்டையாக மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

🌟 செல்லின் தற்கொலைப் பைகள்(Suicidal bags of the cell) என்றழைக்கப்படுகிறது.

🌟 செல்லிற்குள் தேவையற்ற பொருட்களையும், சிதைவடைந்த, முதிர்ந்த செல்லுறுப்புகளையும் செரிக்க செய்கிறது. இதனால் இதற்கு செல்லின் காவலர்கள் என்றும் செல்லின் தற்கொலைப் பை என்றும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக