TET Exam ,குழந்தைப் பருவம் முதல் குமரப்பருவம் வரையான வளர்ச்சி நிலைகள் 002.
குழந்தைப் பருவம்
நடக்கக் கற்றல், பேசக் கற்றல், உணவினை மென்று சாப்பிடக் கற்றல், உடற்கழிவுச் செயல்களை கட்டுப்படுத்தும் திறன், ஆண்-பெண் பால் வேறுபாடு பற்றிய உணர்வு, உடல் சமன்நிலைத்திறன் பெறுதல், எளிய பொதுமைக் கருத்துக்களைக் கற்றல், பெற்றோர், உடன் பிறந்தோரிடம் மனவெழுச்சியின் அடிப்படையில் தொடர்பு கொள்ளல், நல்லவை-தீயவை என்னும் வேறுபாடுகளை உணரத்தொடங்கி மனசாட்சி உருவாதல்.
பிள்ளைப் பருவம் :
எளிய விளையாட்டுகளுக்குரிய உடல் திறன்களைக் கற்றல், தன்னைப் பற்றிய உண்மை நிலைப்பட்ட கருத்தினைப் பெறுதல், ஒத்த வயதினருடன் இணைந்து செயல்படுதல், படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகியவற்றிற்கான அடிப்படைத் திறன்களைக் கற்றல், நல்லொழுக்க நெறிகளைக் கற்றல், பொருத்தமான பாலின நடத்தையை மேற்கொள்ளல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல பொதுமைக் கருத்துக்களைக் கற்றல் போன்றன.
குமரப் பருவம் :
பால் தொடர்பான தனது நிலையினை உணர்ந்து ஏற்றுக்கொள்ளல், இருபால் தோழர்களுடன் புதிய முறை தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளல், பெற்றோர்கள், பிற முதியவர்கள் ஆகியோரிடமிருந்து மனவெழுச்சி சுதந்திரம் பெற்று நடந்துகொள்ளல், சமூகத்தில் திறமையுடன் செயலாற்றத் தேவைப்படும் கருத்துகளை உணர்தல், பிற்கால திருமண - குடும்ப வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்து கொள்ளுதல் போன்றன.
முதிர் பருவம் :
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், இல்லறம் நடத்துதல், குழந்தைகளைப் பெற்று வளர்த்தல், ஒரு தொழிலில் ஈடுபடுதல் போன்றன.
நடுவயது பருவம் :
குடும்ப மற்றும் சமுதாய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், வாழ்க்கையில் பொருளாதார நிலைத்தன்மை பெறுதல், தனது குமரப்பருவ குழந்தைகளுக்கு நல்வழிக்காட்டல், வயது வந்த பெற்றோருக்கு ஏற்ற வகையில் அனுசரித்துப் போதல் போன்றன.
முதுமைப் பருவம் :
திறக்குறைவினைப் பதட்டமின்றி ஏற்றல், வாழ்க்கைத்துணை இழப்பைத் தாங்கிக் கொள்ளுதல், ஓய்வு பற்றிய நன்மனப்பான்மை பெறுதல் போன்றன.
சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் மாற்றம் பெறும்போது முன்பு வலியுறுத்தப்பட்ட வளர்ச்சிசார் செயல்கள் ஒதுக்கப்பட்டு, புதியன இடம் பெறுதல் கூடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக