ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 002.
1. உலகிலேயே மிகவும் அதிக நச்சுத் தன்மையுடைய மீன் எது? - கல் மீன்
2. ஒட்டகச் சிவிங்கி விலங்கின் கழுத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 7
3. செல்லின் ஆற்றல் நிலையம் என்றழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு - மைட்டோகாண்ட்ரியா
4. பொருட்கள் திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது ......... - பினோசைட்டோசிஸ்
5. மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? - ஜப்பான்
6. ஃபேகோ சைட்டோசிஸ் எனப்படுவது எது? - செல் விழுங்குதல்
7. எந்த நிலை செல் பிரிதலின் இடைநிலை எனப்படுகிறது? - G1-நிலை, G2-நிலை, S-நிலை
8. செல்லின் நுண்ணுறுப்புகளில் எந்த நுண்ணுறுப்பை செல்லின் துப்புரவாளர்கள் என்கிறோம்? - லைசோசோம்
9. DNA-வில் காணப்படும் பொருள் எது? - சைட்டோசின், தையமின், அடினைன்
10. மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் பகுதிப் பொருட்கள் எவை? - DNA, புரதம், கொழுப்பு
11. செல் நுண்ணுறுப்புகளில் எவற்றில் கிறிஸ்டே மடிப்பு காணப்படுகிறது? - மைட்டோகாண்ட்ரியா
12. புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S
13. எந்த செல் நுண்ணுறுப்புகளில் புரத சேர்க்கையில் ஈடுபடுகின்றன? - ரைபோசோம்
14. எந்த பாக்டீரியா வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தச் செய்கிறது? - ரைசோபியம்
15. புகையில் உள்ள நச்சுப் பொருள் எது புற்றுநோயை உருவாக்கும்? - பென்சோபைரின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக