ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
உளவியல் வினா விடைகள் 005
1. 'தனது பிரச்சனைகளை எதிர்காலத்தில் தானே தீர்க்கவும், வளர்ச்சிக்கு உதவவும் செய்யும் செயலே அறிவுரை பகர்தல்" என்று கூறியவர் யார்? - டால்பர்ட்
2. வழிகாட்டல் திட்டத்தில் மையப்பங்கு வகிப்பது எது? - அறிவுரை பகர்தல்
3. அறிவுரை பகர்தலோடு தொடர்புடையது எது? - பேட்டி மூலம் வழிகாட்டல்
4. அறிவுரை பகர்தலில் உள்ள பத்து படிநிலைகளைக் கூறியவர் யார்? - நியு%2Bஸம்
5. கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) உடன் தொடர்புடையது - கல்வியில் வழிகாட்டல்
6. பின்தொடர் பணியோடு தொடர்புடையது எது? - அறிவுரை பகர்தல்
7. அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை - நேரடி முறை
8. பாலுணர்ச்சி மேலோங்கி நிற்கும் பருவம் எது? - குமரப் பருவம்
9. நேரடி அறிவுரை பகர்தலின் முதல் படிநிலை என்பது ---------- - பகுப்பாய்வு
10. இளஞ்சிறார்க்கும், தீவிர நடத்தை கோளாறு உள்ளவர்களுக்கும் தேவையான அறிவுரை பகர்தல் - நேரடி அறிவுரை பகர்தல்
11. அறிஞர் கார்ல் ரோஜருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது? - மறைமுக அறிவுரை பகர்தல்
12. பிரச்சனைகளுக்கு எவ்வித முடிவும் தீர்வும் வழங்காத அறிவுரை பகர்தல் எது? - மறைமுக அறிவுரை பகர்தல்
13. மறைமுக அறிவுரை பகர்தலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் - வளர்ச்சிசார் செயல்
14. எப்.சி.தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் எது? - சமரச அறிவுரை பகர்தல் முறை
15. அறிவுரை பகர்தலுக்கு உகந்தவர் யார்? - தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக