புதன், 10 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - நமது நாடு !! 004


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - நமது நாடு !! 004

அரசியல் பிரிவுகள்:

🌟 இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு நாடாகும். இந்தியா 29 மாநிலங்களாகவும், 7 மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும், புதுதில்லி தேசியத் தலைநகர்ப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

🌟 மாநில அரசுகள் தனியாகவும், மத்திய ஆட்சிப் பகுதிகள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகின்றன. இந்தியாவின் தலைநகரம் புதுதில்லி ஆகும்.

மாநிலங்கள்:

1. ஆந்திரப் பிரதேசம்

2. அருணாச்சலப் பிரதேசம்

3. அசாம்

4. பீகார்

5. சத்தீஸ்கர்

6. கோவா

7. குஜராத்

8. அரியானா

9. இமாச்சலப் பிரதேசம்

10. ஜம்மு காஷ்மீர்

11. ஜார்கண்ட்

12. கர்நாடகா

13. கேரளா

14. மத்தியப் பிரதேசம்

15. மகாராஷ்டிரா

16. மணிப்பு%2Bர்

17. மேகாலயா

18. மிசோரம்

19. நாகலாந்து

20. ஒரிசா

21. பஞ்சாப்

22. ராஜஸ்தான்

23. சிக்கிம்

24. தமிழ்நாடு

25. திரிபுரா

26. உத்தரப்பிரதேசம்

27. உத்தரகண்ட்

28. மேற்கு வங்கம்

29. தெலுங்கானா

மத்திய ஆட்சிப் பகுதிகள்:

1. அந்தமான் நிக்கோபார்

2. சண்டிகர்

3. தாத்ரா நாகர் ஹவேலி

4. டாமன், டையு%2B

5. புதுச்சேரி

6. இலட்சத்தீவு

7. புதுதில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி

இந்தியாவின் அண்டை நாடுகள்:

இந்தியாவின் அண்டை நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பு%2Bடான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை ஆகியனவாகும்.

தெரிந்து கொள்வோம்:

🌟 உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட் இமயமலைத் தொடரில் உள்ளது. இதன் உயரம் 8848 மீட்டர்.

🌟 நியு%2Bசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி, இந்தியாவைச் சேர்ந்த டென்சிங் நார்கே, ஆகியோர் கி.பி.1953இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.

🌟 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி பச்சேந்திரி பால்.

🌟 கடலுக்கு அடியில் வாழும் ஒரு முதுகொலும்பில்லா உயிரினம் பவளப்பாலிப்புகள் ஆகும். அவை இறந்த பிறகு அவற்றின் கூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து பவளப்பாறைகளாக உருவாகின்றன.

🌟 பாலைவனத்தில் கோடைக்கால இரவுகள் இதமாகவும், குளிர்கால இரவுகள் கடுங்குளிராகவும் இருக்கும்.

🌟 இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் சிம்லா, முசௌரி, அல்மோரா, நைனிடால் மற்றும் டார்ஜிலிங். இவை கோடைக்காலத்தில் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கின்றன.

🌟 காஷ்மீர் மாநிலத்திற்குக் கோடைக்காலத்தின் தலைநகரம் ஸ்ரீநகர். குளிர்காலத்தின் தலைநகரம் ஜம்மு ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக