வியாழன், 11 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 008.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 008.

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

கற்றல் கற்பித்தலில் குழந்தைகளின் கவனத்தைக் கவர்வதற்கான வழிகள்:

🍀 கற்றல் கற்பித்தல் ஒரு தனிப்பட்டச் செயல் மட்டுமல்ல. அது ஒரு சமூகச் செயல்பாடும் ஆகும். ஆசிரியர் மற்றும் அவர் கையாளும் பொருள்கள், உத்திகள் போன்றவை மாணவர்களின் கவனத்தை கவர்வதாகும்.

கற்பதற்கு ஏற்ற சு%2Bழ்நிலை

🍀 கற்றலிக்கு ஏற்ற சு%2Bழ்நிலையை ஏற்படுத்தினால் தான் குழந்தைகளின் கவனத்தைக் கவரமுடியும்.

மிதமான வேகத்தில் பேசுதல்

🍀 ஆசிரியர் குறைந்த வேகத்தில் பேசுவது, பாடங்கள் நடத்துவது குழந்தைகளின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கும்.

தொடர்ச்சியான ஊக்குவித்தல்

🍀 ஆசிரியர் பாடம் நடத்தும் முழுநேரமும் அன்பான வார்த்தைகளால் மற்றும் ஆர்வமூட்டும் விருப்பச் செயல்பாடுகளால் குழந்தைகளை ஊக்குவித்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் சோர்வின்றி முழுநேரமும் பாடச் செயல்பாடுகளில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.

பரிவுடன் செயல்படுதல்

🍀 ஆசிரியர் கற்றல் - கற்பித்தலில் ஈடுபடும்பொழுது பரிவுடனும் பாசத்துடனும் குழந்தைகளுடன் பழகுவோரேயானால் அவர் கூறுவதைக் குழந்தைகள் ஆர்வத்துடனும், கவனத்துடனும் கேட்பர்.

குழந்தைகளின் மனநிலை

🍀 குழந்தைகளின் மனநிலை கவனத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தை பற்றிய விவரங்களையும் ஆசிரியர் தெரிந்து வைத்திருப்பதால் அவர் மீது தனிக்கவனம் செலுத்த இயலும்.

விளையாட்டு வழிக் கல்வி

🍀 குழந்தைகள் இயல்பாகவே விளையாட்டில் ஆர்வமிக்கவர்கள். கற்றல் - கற்பித்தல் முறை விளையாட்டு முறையில் அமைந்தால் குழந்தைகள் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை ஆர்வமுடன் கவனிப்பர்.

கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்

🍀 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எல்லோரையும் ஈர்ப்பது விளம்பரங்கள் என்றால் அது மிகையாகாது. ஆசிரியர் வகுப்பறைச் செயல்பாடுகளை கவர்ச்சிகரமாக அமைத்தால் குழந்தைகள் கவனத்துடன் ஈடுபடுவர்.

🍀 அறிவியல் கண்காட்சிகள் அமைத்தல் குழந்தைகளின் அறிவியல் பங்கேற்கும் ஆர்வத்தைத் தூண்டும். மொழிப் பாடங்களில் வரும் செய்யுள்கள், பாடல்களை இசையுடன் பாடுதல், நாடகங்களை நடித்துக் காட்டுதல் போன்றவை குழந்தைகளின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.

🍀 கணிதப்பாடம் கற்பிக்கும்போது துணைக் கருவிகளைப் பயன்படுத்துவது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து கணிதக் கருத்துகளை உறுதிப்படுத்தும்.

🍀 சமூகவியல் பாடம் கற்பிக்கும்போது குழந்தைகளைக் கொண்டு நடிக்கச் செய்தல் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்க்கும்.

🍀 வாழ்க்கையை ஒட்டிய நிகழ்ச்சிகளிலிருந்து உதாரணங்களை கொடுத்துப் பாடங்களை கற்பிக்கும்போது குழந்தைகளின் கவனம் பாடத்தில் பதிகிறது.

🍀 வாழ்க்கை நிகழ்ச்சிகள் குழந்தைகளின் பழைய அனுபவங்களாகும். பாடக் கருத்துகள் என்ற புதிய அனுபவம் பழைய அனுபவத்துடன் தொடர்பு கொள்ளும்போது எளிதாகிறது.

🍀 எளிதில் புரியும் கருத்துக்கள் குழந்தைகளின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக