திங்கள், 8 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 005.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 005.

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

உடல் தேவைகள்:

5 முதல் 8 வயது வரை:

🍀 10 முதல் 12 மணி வரையான நல்லுறக்கம் பற்களின் பாதுகாப்பிற்குத் தேவை. அடிக்கடி ஓய்வுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஓடி ஆடி விளையாடுவது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு அதிக வீட்டுபாடச் செயல்கள் கொடுக்கக்கூடாது.

🍀 உணவருந்தப் பழக்குவது, பொருள்களைக் கையாளக் கற்றுக் கொடுப்பது, விளையாட போதுமான இடம், கைக்குட்டையை, துண்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பது, கண்ட பொருள்களை வாயருகே கொண்டு செல்லாமல் இருப்பது, ஆடைகளை தூய்மையாக வைத்து கொள்ளுவது, நன்றாக உடுத்துவது போன்றவற்றைக் கற்றுத்தருவது மிகவும் அவசியமாகிறது.

🍀 தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இளம்பிள்ளை வாதம், மூச்சுக் கோளாறுகள் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பற்ற உதவுதல் அவசியமாகிறது.


🍀 குழந்தைகளின் உடல் இயக்கங்களைச் செம்மைப்படுத்த ஆடல், பாடல், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பொருத்தமான விருப்ப விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை விளையாடச் செய்தல்.

🍀 செயல்பாடுகளை அடிக்கடி மாற்றி அவர்களின் சோர்வுகளைப் போக்குவது மிக நல்லது. சுயமாக உடல் சுத்தம் மற்றும் சுகாதார பராமரிப்புகளை மேற்கொள்ள உதவுதல்.

🍀 குழந்தைகள் தங்கள் உடல் இயக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திச் செம்மைப்படுத்தவும் மற்றும் சிறப்பாக வெளியிடவும் அதிக வாய்ப்புகளையும், வசதிகளையும் அளிக்க வேண்டும்.

🍀 குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் ஊட்டச் சத்துணவுகள், ஓய்வுகள் போன்றவற்றில் ஆசிரியர்கள் அதிக அக்கறைகாட்ட வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக