வியாழன், 11 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 006.


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள் 006.

1. 40மீ நீளமுடைய சதுர வடிவ மனையின் பரப்பளவு, சுற்றளவு காண்க.

விடை: 1600 ச.மீ., 160 மீ.

விளக்கம்:

சதுர வடிவ மனையின் பக்கம் = 40மீ

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் * பக்கம்

= 40 * 40

= 1600 ச.மீ.

சதுரத்தின் சுற்றளவு = 4 * பக்கம்

= 4 * 40 = 160மீ.

சதுரத்தின் பரப்பளவு = 1600ச.மீ.

சதுரத்தின் சுற்றளவு = 160மீ.
2. சதுர வடிவப் பு%2Bந்தோட்டத்தின் பக்கம் 50மீ. பு%2Bந்தோட்டத்தைச் சுற்றி மீட்டருக்கு ரூ.10 வீதம் வேலிபோட ஆகும் செலவைக் காண்க.

விடை: ரூ.2000

விளக்கம்:

சதுர வடிவப் பு%2Bந்தோட்டத்தின் பக்கம் 50மீ. எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலிபோட ஆகும் மொத்த செலவைக் காண தோட்டத்தின் சுற்றளவைக் கண்டு அதை மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது.

சதுர வடிவப் பு%2Bந்தோட்டத்தின் சுற்றளவு = 4 * பக்கம்

= 4 * 50

= 200மீ

வேலிபோட ஒரு மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10

ஃ 200 மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10 * 200

= ரூ.2000
3. பக்கம் 60மீ உடைய சதுர வடிவப் பு%2Bங்காவைச் சமன் செய்ய சதுர மீட்டருக்கு ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.

விடை: ரூ.7200

விளக்கம்:

சதுர வடிவப் பு%2Bங்காவின் பக்கம் 60மீ. எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

சமன் செய்ய ஆகும் செலவைக் காண, பரப்பளவைக் கண்டு அதனைச் சதுர மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது.

பு%2Bங்காவின் பரப்பளவு = பக்கம் * பக்கம்

= 60 * 60 = 3600ச.மீ.

ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.2

ஃ 3600 சதுர மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.2 * 3600

= ரூ.7200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக