வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - சுதந்திர இந்தியா


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)

சுழ்நிலையியல் - சுதந்திர இந்தியா !!

வேலு}ர்ப் புரட்சி (1806):

🌟 ஐரோப்பிய பாணியிலான தொப்பிகளை அணிவதற்கு இந்தியச் சிப்பாய்கள் வலியுறுத்தப்பட்டனர். சமய அடையாளங்களான திலகமிடுதல், தாடி வளர்த்தல் ஆகியவற்றிக்கு ஆங்கிலேய அரசு தடைவித்தது. இவை வேலு}ர்ப் புரட்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

பெரும் புரட்சி (முதல் இந்திய சுதந்தரப் போராட்டம்) (1857):

🌟 பசு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களைப் பயன்படுத்த, இந்தியச் சிப்பாய்களை ஆங்கிலேயர் வற்புறுத்தினர். இது, இந்து மற்றும் இஸ்லாமிய படைவீரர்களின் சமய உணர்வைப் புண்படுத்தியது.

🌟 இப்புரட்சியின் முக்கியத் தலைவர்களாக பகதூர்ஷா, நானாசாகிப், தாந்தியா தோபே மற்றும் ஜான்சி இராணி லட்சுமி பாய் ஆகியோர் இருந்தனர்.

இந்திய தேசியக் காங்கிரஸ் (1885) :

🌟 இந்தியாவின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் பு%2Bர்த்தி செய்வதற்காக கி.பி. 1885 ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹியு%2Bம் என்ற ஆங்கில அதிகாரியால் இந்திய தேசியக் காங்கிரஸ் மும்பையில் தோற்றுவிக்கப்பட்டது.

🌟 பின்னர் இந்த அமைப்பு, சுதந்தரப் போராட்டத்தை வழிநடத்தும் அமைப்பாக மாறியது. இந்திய தேசியக் காங்கிரஸ் பல போராட்டங்களை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தியது.

வங்கப் பிரிவினை (1905):

🌟 போராட்டங்கள் தீவிரமடைவதை அறிந்த ஆங்கிலேயர்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்க எண்ணினர்.

🌟 அதற்காக கி.பி. 1905 ஆம் ஆண்டு ஆங்கில அரசுப் பிரதிநிதியான கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இதை எதிர்த்து அதே ஆண்டு சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. இதன் மூலம் அந்திய பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன.

ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919):

🌟 இந்தியர்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்க, ஆங்கிலேயர் அடக்கு முறைச்சட்டமான ரௌலட் சட்டத்தை கி.பி. 1919 ஆம் ஆண்டு இயற்றினார்.

🌟 இதை எதிர்த்து அதே ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலா பாக் என்னும் இடத்தில் மக்கள் அமைதியாகக் கூடினார். கூட்டத்தைக் கலைக்க எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஆங்கிலத் தளபதி டயர் துப்பாக்கிச் சு%2Bட்டிற்கு உத்தரவிட்டார்.

🌟 அதில் நு}ற்றுக்கணக்கானோர் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். இப்படுகொலை சுதந்தரப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக