சனி, 6 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1), குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 002


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1),
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

உடல் வளர்ச்சி சுழற்சி:

🍀 உடல் வளர்ச்சி சீரானதும் முறையானதும் ஆகும். குழந்தைகள் இவ்வளவு உயரம் வளர்வார்கள், இவ்வளவு எடையைப் பெற்றிருப்பார்கள் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற இயலாது.

🍀 உடல் வளர்ச்சி என்பது பலக் கட்டங்களை உள்ளடக்கியது. மேலும் உடல் வளர்ச்சி என்பது உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல் இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.

🍀 நரம்பு மண்டல வளர்ச்சி பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறுகிறது. இதன் பின்னர் நரம்பு மண்டல வளர்ச்சி மெதுவாக நடைபெறுகிறது.

🍀 மூளை வளர்ச்சி பிறப்பு முதல் நான்கு வயது வரை விரைவாகவும் அதன் பின்னர் எட்டு வயது வரை மிதமாகவும், பின்னர் பதினாறு வயதுவரை மெதுவாக முன்னேற்றமடைந்து முழுமையடைகிறது.

🍀 பிறக்கும் பொழுது குழந்தையின் மூளையின் நிறை சுமார் 350 கிராமாகவுள்ளது. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் 1,400 கிராம் வரையுள்ளது. பிறக்கும் பொழுது கால் மடங்காகவும், ஒன்பதாவது மாதம் அரை மடங்காகவும், நான்காவது வயதில் ஐந்தில் நான்கு மடங்காகவும், ஆறாவது வயதில் அது 90 விழுக்காடாகவும் மூளையின் வளர்ச்சியுள்ளது.

🍀 மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, பிறக்கும் பொழுது அது 1/8 ஆகவும், பத்தாவது வயதில் அது 1/8 ஆகவும், பதினைந்தாவது வயதில் அது 1/30 ஆகவும், பருவமடையும் பொழுது அது 1/40 ஆகவும் உள்ளது.

🍀 குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது ஏறத்தாழ 52 சென்டி மீட்டராகவும், ஐந்தாவது வயதில் 106 செ.மீ. ஆகவும், ஒன்பதாவது வயதில் 131 செ.மீ. ஆகவும், பதிமூன்றாவது வயதில் 151 செ.மீ. ஆகவும் உள்ளது.

🍀 ஆரம்ப நிலையில் உயர வளர்ச்சி விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் உள்ளது. பெண் குழந்தைகளின் உயர வளர்ச்சி ஆண் குழந்தைகளை விட சற்றுக் குறைவாகவுள்ளது. குழந்தைகளின் உயர வளர்ச்சியில் தனியாள் வேறுபாடு அதிகமாகவுள்ளது.

🍀 சில குழந்தைகள் உயரமாகவும், சில குழந்தைகள் குள்ளமாகவும் உள்ளனர். ஆறு அல்லது ஏழு வயதில் உயரமாக உள்ள குழந்தை 15 அல்லது 16 வயதிலும் உயரமாக உள்ளனர்.

🍀 பிள்ளைப் பருவத்தினரை வாலிபப் பருவத்தை நோக்கி நல்ல வளர்ச்சியடையச் செய்வதில் பள்ளியின் பங்கு மகத்தானது.

🍀 பிள்ளைப் பருவம் கற்றலுக்கு ஏற்றப் பருவம். இந்த இளம் பருவத்தில் கற்றலில் ஆர்வமுள்ளக் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த அறிவாளிகளாகத் திகழ்கின்றனர்.

🍀 உடல் வளர்ச்சியென்பது உடலின் பெருக்கத்தை மட்டும் குறிப்பதல்ல. அதன் செயல் திறனையும் குறிக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக