வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல்

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல்

சர். ஜெகதீஸ் சந்திர போஸ்

🌟 இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானி சர். ஜெகதீஸ் சந்திர போஸ். இவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற வியப்பு%2Bட்டும் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியல் மேதை ஆவார்.

🌟 இவர் கி.பி. 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாள் தற்போதைய வங்காள தேசத்திலுள்ள விக்ரபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

🌟 அவர் தந்தையின் பெயர் பகவான் சந்திரபோஸ்; தாயின் பெயர் அபாலா போஸ்.

🌟 ஆரம்பக்கல்வியை உள்ளூரிலும், கொல்கத்தாவில் உயர்நிலை மற்றும் கல்லு}ரி படிப்பையும் முடித்தார். பின்னர், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் கல்லு}ரியில் மேலும் ஓர் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.

🌟 இவர் இயற்பியல், உயிரியல், தாவரவியல் மற்றும் தொல்லியல் துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

🌟 படிப்பை முடித்து நாடு திரும்பிய ஜெ.சி.போஸ் கொல்கத்தாவில் உள்ள மாநிலக்கல்லு}ரியில் சிறிது காலம் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.

🌟 பின்னர் அறிவியல் ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தினார். ரேடியோ அலைகள் பற்றிய அவரது கண்டுபிடிப்பு வானொலி உருவாக அடிப்படையாக அமைந்தது.

🌟 இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று அறிவியல் துறையில் ஆய்வுக்கட்டுரைகள் பல வழங்கினார். இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தார்.

🌟 போஸ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் அமைப்பைத் தொடங்கி அவர் தனக்குப் பிடித்த தாவரவியல் ஆய்வில் ஈடுபட்டார்.

🌟 இவருக்கு லண்டன், கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

🌟 ஆங்கிலேய அரசு ′சர்′ பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தது.

🌟 இவர் கி.பி.1937இல் நவம்பர் 23ஆம் நாளன்று இயற்கை எய்தினார்.

🌟 இவர், மாணவர்களுக்குக் கூறியது உண்மையான மாணவன் பணத்தையும் பதவியையும் தேடாமல் அறிவைத் தேடுவதிலேயே ஊக்கமாய் இருப்பான், என்பதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக