ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - சுதந்திர இந்தியா !!


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - சுதந்திர இந்தியா !!

விடுதலைப் போராட்டத்தில் தமிழகம்:

🌟 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பெருமைக்குரியது. பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், இராஜாஜி மற்றும் கர்ம வீரர் காமராசர் போன்றோர், சுதந்தரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தனர்.

கப்பலோட்டிய தமிழன்:

🌟 கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் வ.உ. சிதம்பரனார் ஆவார். சுதேசி இயக்கம் தமிழ்நாட்டிற்கு அளித்த தவப்புதல்வர்தான் வ.உ. சிதம்பரம் பிள்ளை. அவர், கி.பி.1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். சட்டம் பயின்ற இவர், இந்தியர்களுக்காக ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசிக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கினார்.

🌟 காலியோ, லாவோ என்ற இரு கப்பல்களை வாங்கினார். ஆங்கில அரசு கொடுத்த பல இன்னல்களுக்கு இடையே இந்தக் கப்பல் போக்குவரத்தை இந்தியர்களுக்காக இயக்கினார். இதனால் அவர் 'கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்பட்டார்.

🌟 அவை நெல்லையில் ஆங்கில அரசை எதிர்த்து எழுச்சி உரை ஆற்றியதால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கல் உடைத்தார், செக்கிழுத்தார். பின்னர் கி.பி.1912 இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் கி.பி.1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இயற்கை எய்தினார்.

🌟 சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வ.உ.சிதம்பரனார் நீங்கா இடம் பெற்றார்.

🌟 இந்திய அரசாங்கம் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கி.பி.1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டது.

தில்லையாடி வள்ளியம்மை:

🌟 தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தில்லையாடி என்ற கிராமத்தில் வள்ளியமை பிறந்தார். பின்னர், தென் ஆப்பிரிக்காவில் குடியேறினார்.

🌟 தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் கிறித்துவ முறைப்படிதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற தென் ஆப்பிரிக்க அரசின் அறிவிப்பை எதிர்த்து தில்லையாடி வள்ளியம்மை, காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் அம்மையாருடன் இணைந்து போராடினார்.

🌟 இதற்காக, இவர் மூன்று மாதங்கள் சிறைத் தண்டணை அனுபவித்தார். சிறையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக இளம் வயதிலேயே இயற்கை எய்தினார்.

🌟 இவர் இந்திய தேசியக் கொடியை உருவாக்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக