TET EXAM ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
📝 தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் TET (வுயஅடை யேனர வுநயஉhநசள நுடபைiடிடைவைல வுநளவ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
📝 அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது.
📝 முதல் மற்றும் 2-ம் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
📝 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு தாள் I மற்றும் II (வுNTET Pயிநச I யனெ II) 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க 15.03.2019 முதல் 05.04.2019 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
📝 தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் II தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் கோரி முறையீடுகள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதால் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 12.04.2019 மாலை 5.00 மணிவரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க :
http://trb.tn.nic.in/TET_2019/msg1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக