ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. பின்தங்கிய குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்த தேசியக் கல்விக் கொள்கை சமர்பிக்கப்பட்ட ஆண்டு - 1964-66
2. பெண்கள் கல்வியைப் பற்றி ஆராய தேசியப் பெண்கள் கல்விக் கமிட்டி நியமித்த முதல் அமைச்சர் - திரு. பக்தவச்சலம்
3. முதியோர் கல்வி என்பது, முறைசாராக் கல்வி அமைப்பின் மூலம் --------- வயதுக்கு மேற்பட்ட வயது வந்தோருக்கான கல்வியாகும். - 15
4. இரவுப் பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன? - முதியோர்
5. இவற்றில் எது முன்பருவக் கல்வி அல்ல?
அ. அங்கன்வாடி
ஆ. நர்சரி
இ. மாண்டிச்சேரி
ஈ. மெட்ரிகுலேசன்
விடை: அ. அங்கன்வாடி
6. இந்தியாவில் எழுத்தறிவின்மைக்கு ஒரு முக்கியக் காரணம் - மக்கள் தொகை
7. தேசிய ஒருமைப்பாட்டை அடைய பிறருடைய எதைப் பற்றிய புரிதல் தேவை? - கலாச்சாரம்
8. தாகூரின் கல்விக் கொள்கைகட்கு அடிப்படையக அமைவது - சுதந்திரமும், சுயவெளிப்பாடும்
9. நம் பள்ளிகளில் கல்வி தொழில் மயமாதல் என்பது ------------ நிலையில் நடைபெறுகிறது. - மேல்நிலைப் பள்ளி நிலை
10. ------------------- பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்தது என்று சொன்னார் ஸ்டான்லிஹhல் - குமரப் பருவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக