ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!
1. உலகளவில் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கு உலகத்தர அமைப்பு(ISO) எங்கு, எப்போது துவங்கப்பட்டது? - ஜெனிவா, 1947
2. CAC என்பதன் விரிவாக்கம் - Codex Alimentation Commission
3. தேசிய நுகர்வோர் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? - டிசம்பர் 24
4. உலக நுகர்வோர் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? - மார்ச் 15
5. இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1986
6. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - நுகர்வோரின் மகாசாசனம்
7. தலையிடாக் கொள்கை என்பது -------- - அரசு பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது
8. கவிச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் யார்? - கம்பர்
9. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவைகளுள் சிறந்த உரை ------------ - பரிமேலழகர் உரை
10. 'குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு" - இக்குறளில் காணப்படும் அளபெடை - சொல்லிசை அளபெடை
11. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் யார்? - பாரதியார்
12. 'என் இலட்சுமி வந்துவிட்டால்" என்று பசுவைப் பார்த்துக் கூறுவது - திணை வழுவமைதி
13. எந்த ஆண்டு எட்வர்ட் ஜென்னர் தடுப்பு%2Bசி என்னும் சொற்றொடரை உருவாக்கித் தடுப்பு%2Bசிக் கொள்கைகளை வெளியிட்டார். - 1791
14. 1970-ல் உலகையே ஆட்டிப்படைத்த கொடுமையான நோய் - இன்புளுயன்சா
15. ஒரு செல் பு%2Bஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட்
16. வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுபவர் - லின்னேயஸ்
17. சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே
18. மண்புழு சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது - தோல்
19. தவளையின் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது? - நுரையீரல், தோல்
20. தாவரங்களின் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது? - இலை, தண்டு, வேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக