TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகு .......... - செல்
2. இராபர்ட் ஹூக் ............. ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தார்? - 1665
3. 1838ஆம் ஆண்டு செல் கொள்கை ஒன்றை உருவாக்கியவர் யாவர்? - ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர் ஷீவான்
4. செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு .............. என்று பெயர். - செல் நுண்ணுறுப்புகள்
5. ............. செல்களுக்கு உருவத்தினை கொடுக்கிறது. - எண்டோபிளாஸ்மிக் வலைபின்னல்
6. எண்டோபிளாஸ்மிக் வலைபின்னலில் ஒட்டியிருக்கும் சிறிய கோள வடிவத் துகள்கள் போன்ற அமைப்பு .............. - ரைபோசோம்
7. விழித்திரையில் விழி நிறமிச்செல்களை உருவாக்க உதவுவது எது? - கோல்கை உறுப்புகள்
8. ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினை பெற்றவர் யாவர்? - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ், அடாயத்
9. தாமஸ் ஸ்டெய்ஸ் என்ற அறிஞர் எந்த நாட்டை சார்ந்தவர்? - அமெரிக்கா
10. வளரும் ஊசைட்டுகளில் சில மஞ்சள் நிற கருவை உருவாக்குவது எது? - கோல்கை உறுப்புகள்
11. விந்தணுவில் உள்ள அக்ரோசோமை உருவாக்க உதவுவது எது? - கோல்கை உறுப்புகள்
12. செல்லில் உள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றும் ஒரு வகை அமைப்பு எது? - லைசோசோம்
13. லைசோசோம்கள் நேரடியாக ................. லிருந்து தோன்றுகிறது. - எண்டோப்பிளாச வலை
14. தற்கொலைப் பைகள் என்றழைக்கப்படுவது எது? - லைசோசோம்
15. மைட்டோகாண்டிரியாவில் உட்சவ்வானது விரல் போன்ற நீட்சியை உட்புறமாக உருவாக்குகிறது. இதற்கு என்ன பெயர்? - கிரிஸ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக