வியாழன், 30 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தொழிற்பெயர் விகுதிகள் யாவை?
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், பாடு, அரவு, ஆனை, மை, து ஆகும்

2. எழுவாய் வேற்றுமை எனப்படுவது எது?
முதல் வேற்றுமை

3. தொழிற்பெயர் வகைகளை கூறுக?
1. முதனிலை தொழிற்பெயர், 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

4. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?
தொழிற்பெயர் விகுதிகள் இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது. (எ.கா) ஆடுதல் - ஆடு

5. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன?
தொழிற்பெயரின் முதனிலையாக பகுதி திரிந்து வருவதாகும். (எ.கா) பெறுதல் - மக்கட்பேறு

6. வினையாலணையும் பெயர் என்றால் என்ன?
வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிக்கும். (எ.கா) நடித்தார் - நடிப்பவர்

7. பண்புப்பெயர் என்ன?
பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் ஆகும்.

8. பண்புப்பெயர் எதன் அடிப்படையில் தோன்றும்?
நிறம், சுவை, அளவு, வடிவம்

9. பண்புப்பெயர் விகுதிகள் யாவை?
மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், பம், து, மன், இல்

10. வேற்றுமை உருபுகள் யாவை?
ஐ, ஆல், கு, இன், அது, கண்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக