ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்வது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு? - முயன்று தவறிக் கற்றல்
2. மனதில் திடீரென ஒரு பொறி தோன்றி அதனால் அச்செயல் உடனே முடிவுக்கு வருவது - அறிவுசார் நிலைக் கற்றல்
3. அறிவின் உருவாக்கமே ------------ எனலாம். - கற்றல்
4. நல்லதொரு சிந்தனையின் உயர்நிலையாக -------------- விளங்குகிறது. - உள்ளுணர்வு
5. பாவ்லோவ் தன்னுடைய சோதனைக்கு எந்த மிருகத்தைப் பயன்படுத்தினார்? - நாய்
6. காக்னே கூறும் கற்றல் படிநிலைகள் எத்தனை? - 7
7. பி.எஃப். ஸ்கின்னர் தன்னுடைய சோதனைக்கு ஆய்வுப் பொருளாக எதைப் பயன்படுத்தினர்? - வெள்ளை எலி
8. அறிவு உருவாக்கக் கொள்கையாளர் விரும்புவது - கற்றல் மையக் கற்பித்தல்
9. பழைய ஆக்கநிலையுறுத்தல் உணர்த்தும் படிநிலை எது? - சைகை வழிக் கற்றல்
10. பேச, எழுத கற்கும் செயல்முறையோடு தொடர்புடைய காக்னேயின் படிநிலை எது? - சங்கிலி கற்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக