வெள்ளி, 24 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது

அ. பிரச்சனைத் தீர்தல்

ஆ. செய்து கற்றல்

இ. செயல்திட்ட முறை

ஈ. மனப்பாடம் செய்வித்தல்

விடை - இ - செயல்திட்ட முறை

2. பள்ளி மேம்பாட்டுத் திட்டமானது எதன்மூலம் பள்ளி தேவைகளை நிறைவு செய்ய உதவுகிறது? - சமுதாயம்

3. இவற்றில் சிக்கலான பொதுமைக் கருத்து

அ. சதுரம்

ஆ. முக்கோணம்

இ. சிறிய நீலநிற சதுர கட்டை

ஈ. வட்டம்

விடை: இ - சிறிய நீலநிற சதுர கட்டை

4. 'உலக உயிரினங்களுக்கு உணவும், இனப்பெருக்கமும் எவ்விதம் இன்றியமையாத ஒன்றோ அதே போன்றுதான் சமுதாயத்திற்கு கல்வியும்" என்று கூறியவர் - ஜான்டூயி

5. செகண்டரி கல்விக் கமிஷனுக்குத் தலைமை வகித்தவர் - டாக்டர் லக்‌ஷமணசுவாமி முதலியார்

6. முற்போக்கு கல்வியை புகுத்தியவர் - ஜான்டூயி

7. சுவிட்சர்லாந்திலுள்ள ஒல்டன்-வால்ட் பள்ளியைத் (Oldenwald School) தோற்றுவித்தவர் - பால் கேஹப்

8. பருப்பொருட்களின் இயக்கத்தை எடுத்துக்காட்டும் மூன்றுத் தத்துவங்கள் - நஷ்ட ஈடு, மாற்றி அமைத்தல் மற்றும் ஒத்திருத்தல்

9. முறைசாராக் கல்வி மையங்கள் மூலம் பயன் பெறுவோர் - 15 - 35 வயதினர்

10. 'வார்த்தைகளுக்கு முன்பே பொருள்" என்ற கருத்தையுடையவர் யார்? - பெஸ்டலாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக