திங்கள், 27 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - உணவூட்டம்



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - உணவூட்டம்

🔹 உணவு உட்கொள்ளும் முறையே உணவு%2Bட்டம் ஆகும். உணவு%2Bட்டம் என்பது உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் எனப் பல நிலைகளை உடையது. உயிரினங்கள் திண்ம மற்றும் நீர்ம நிலையில் உள்ள உணவுப் பொருள்களை வெவ்வேறு முறைகளில் உட்கொள்கின்றன.

உணவு%2Bட்டத்தின் வகைகள் :

தற்சார்பு ஊட்ட முறை :

🔹 தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல், தற்சார்பு ஊட்ட முறை ஆகும்.(எ.கா) பசுந்தாவரங்கள், யு%2Bக்ளினா.

🔹 இவை ஒளிச்சேர்க்கை மூலமாக உணவைத்தாமே தயாரிக்கின்றன. ஒளிச்சேர்க்கை என்பது சு%2Bரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது ஆகும்.

பிற சார்பு ஊட்ட முறை :

🔹 தானே உணவைத் தயாரிக்க இயலாததால் உணவுக்காகப் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்தல் பிற சார்பு ஊட்ட முறை ஆகும்.

பிற சார்பு ஊட்ட முறையின் வகைகள் :

ஒட்டுண்ணி உணவு%2Bட்டம் :

🔹 பிற உயிரினங்களைப் பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெறுவது ஒட்டுண்ணி உணவு%2Bட்டம் ஆகும்.

🔹 கஸ்க்யு%2Bட்டா(Cuscuta) தாவரம் உணவிற்காகப் பிற தாவரங்களைச் சார்ந்து வாழ்கிறது. இது ஒட்டுண்ணி ஊட்டமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஒட்டுண்ணியின் வகைகள் :

புற ஒட்டுண்ணிகள் :

🔹 பேன், அட்டைப்பு%2Bச்சி போன்றவை பிற உயிரினங்களின் உடலின் வெளிப்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அவற்றிலிருந்து உணவை உறிஞ்சுகின்றன. எனவே, இவை புற ஒட்டுண்ணிகள் ஆகும்.

அக ஒட்டுண்ணிகள் :

🔹 உருளைப்புழு மனிதன் மற்றும் விலங்குகளின் குடல் பகுதியில் வாழ்ந்து அங்கிருந்தே உணவைப் பெறுகின்றது. எனவே இது ஓர் அக ஒட்டுண்ணி ஆகும்.

சாறுண்ணி உணவு%2Bட்டம் :

🔹 இறந்துபோன தாவர, விலங்குப் பொருள்களை மக்கச் செய்து. எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது சாறுண்ணி உணவு%2Bட்டம் ஆகும். எ.கா. காளான்

சிறப்பு வகை உணவு%2Bட்டம் :

🔹 நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா போன்ற தாவரங்கள் பசுமையானதாகவும், தற்சார்பு ஊட்டமுறையைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவை நைட்ரஜன் சத்துக்குறைந்த மண்ணில் வளர்வதால் பு%2Bச்சிகளைப் பிடித்து உட்கொண்டு, அவற்றிலிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன. எனவே, அவை பு%2Bச்சி உண்ணும் தாவரங்கள் எனப்படுகின்றன.

உணவு%2Bட்ட முறையின் அடிப்படையில் விலங்குகள் :

🔹 தாவரங்களை மட்டும் உண்பது தாவர உண்ணி (Herbivore). எ.கா. ஆடு, மாடு.

🔹 விலங்குகளை மட்டும் உண்பது மாமிச உண்ணி (Carnivore) எ.கா. புலி

🔹 தாவரங்ககளையும் விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (Omnivore) எ.கா. காகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக