ஞாயிறு, 26 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) கணிதம்(Maths)


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)

1. முரளியிடம் உள்ள ஒரு பையின் எடை 3கி.கி. 450கி. இந்த எடையைக் கிராமில் குறிப்பிடுக.

விடை: 3450கி

தீர்வு:

முரளியிடம் உள்ள பையின் எடை = 3கி.கி. 450கி. (ஃ1கி.கி = 1000கி)

= (3 * 1000கி) %2B 450கி.

= 3000கி %2B 450கி

= 3450கி


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2. பரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன?

விடை: ரூ.650

தீர்வு:

தள்ளுபடி = ரூ.50

இலாபம் = ரூ.100

குறித்த விலை = ரூ.800

விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி

= ரூ.800 - ரூ.50

= ரூ.750

இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை

ரூ.100 = ரூ.750 - அடக்க விலை

அடக்க விலை = ரூ.750 - ரூ.100

= ரூ.650
3. இரகு ஒரு நாற்காலியை ரூ.3000க்கு வாங்குகிறார். அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன?

விடை: ரூ.3800

தீர்வு:

அடக்க விலை = ரூ.3000

இலாபம் = ரூ.500

தள்ளுபடி = ரூ.300

விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி

= குறித்த விலை - ரூ.300

இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை

ரூ.500 = குறித்த விலை - ரூ.300 - ரூ.3000

குறித்த விலை = ரூ.500 %2B ரூ.300 %2B ரூ.3000

= ரூ.3800

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக