செவ்வாய், 21 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. புலன் ஒன்று தூண்டப்படுவதால் ஏற்படும் உடனடி பயன் எது? - புலனுணர்வு

2. அறிதிறன் வளர்ச்சியை தொடர்ச்சியான படிநிலைகளாக விளக்கிய சுவிட்சர்லாந்து உளவியலறிஞர் - ஜீன் பியாஜே

3. புலன் காட்சியின் நான்கு கூறுகளைக் குறிப்பிடும் அறிஞர் யார்? - முர்பி

4. உணர்ச்சி, பொருள் கூறுதல் எனும் இரு கூறுகளைக் கொண்ட உளச்செயல் எது? - புலன் காட்சி

5. புலன்காட்சி முழுமையும் ஒருமையும் பெற்று விளங்கும் கொள்கை எது? - முழுமைக் காட்சி விதி

6. இரவு நேரத்தில் கயிற்றை மிதித்துவிட்டு, அச்சத்தினால் பாம்பு என்று எண்ணுவது? - திரிபுக்காட்சி

7. ஒரு குறிப்பிட்ட தூண்டல் சரியாக புரிந்துகொள்ளும் போது ........... ஏற்படுகிறது என்கிறோம் - புலன் காட்சி

8. ஒரு தூண்டல் தவறாகப் புரிந்து கொள்ளும்போது அதனை ........... என்கிறோம் - திரிபுக்காட்சி

9. அறிதலின் முதல் அடிப்படை நிலை எது? - புலன் காட்சியறிதல்

10. புலன் காட்சியில் முதலில் தோன்றிய பொருள் இன்றி அப்பொருள் பற்றி உணர்தலை ........... என்கிறோம் - மனபிம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக