வெள்ளி, 24 மே, 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. அயோடின் தயாரிக்கப் பயன்படும் ஆல்கா - கெல்ப்

2. டையேட்டமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் ஆல்கா - டையேட்டம்

3. விண்வெளிப் பயணத்தின் போது CO2 மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்றப் பயன்படும் ஆல்கா - குளோரெல்லா, பைரினாய்டோசா

4. தாவர உலகின் நீர்நில வாழ்வன என அழைக்கப்படுவது? - பிரையோஃபைட்டுகள்

5. பைனஸ் தாவரத்தின் ரெசினிலிருந்து பெறப்படுவது - டர்பன்டைன்

6. எஃபிட்ராவிலிருந்து பெறப்படும் எஃபிட்ரைன் என்ற ஆல்கலாய்டு பயன்படுவது - ஆஸ்த்துமா

7. 1858 ஆம் ஆண்டில் யாரால் 'செல்கொள்கை" மீண்டும் எழுதப்பட்டது? - ரூடால்ஃப் விர்சோ

8. நியு%2Bக்ளியஸ் கண்டுபிடிக்கப்பட்ட வருடம் (ராபர்ட் பிரவுன்) - 1831

9. புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் - புர்கின்ஜி

10. பாக்டீரியாவில் செல்சுவர் எதனால் ஆனது? - பெப்டிடோகிளைக்கான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக