வியாழன், 30 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 
சூழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

மாற்றங்கள் :

🌾 மாற்றங்கள் எனப்படுவது பொருள்களின் வண்ணம், வெப்பநிலை, இடம், வடிவம், பருமன் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.

மாற்றங்களின் வகைகள் :

🌾 மெதுவான, வேகமான மாற்றங்கள்

🌾 மீள் மாற்றம், மீளா மாற்றம்

🌾 விரும்பத்தக்க மாற்றங்கள், விரும்பத்தகாத மாற்றங்கள்

🌾 கால ஒழுங்கு மாற்றங்கள், கால ஒழுங்கற்ற மாற்றங்கள்

🌾 வெப்பம் உமிழ் மாற்றங்கள், வெப்பம் கொள் மாற்றங்கள்

மெதுவான, வேகமான மாற்றங்கள் :

மெதுவான மாற்றம்:

🌾 சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகழும் மாற்றமே மெதுவான மாற்றம் ஆகும்.

எ.கா :

🌾 குழந்தை வளர்தல், இரும்பு துருப்பிடித்தல், விதை வளர்ந்து மரமாதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்

வேகமான மாற்றம்:

🌾 சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் நிகழும் மாற்றமே வேகமான மாற்றம் ஆகும்.

எ.கா :

🌾 காகிதம் எரிதல், பட்டாசு வெடித்தல், மின் சக்தியால் விளக்கு ஒளிர்தல் போன்ற நிகழ்வுகள் விரைவாக நிகழ்கின்றன. எனவே இந்நிகழ்வுகளெல்லாம் வேகமான மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மீள் மாற்றம் மற்றும் மீளா மாற்றம் :

மீள் மாற்றம் :

🌾 சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும். இவ்வகை மாற்றங்களே மீள் மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

1. பனிக்கட்டி உருகுதல்

2. தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்களாலான அணிகலன்கள் மற்றும் கருவிகள் செய்வதைப் பார்த்திருப்போம். முதலில் உலோகங்களை வெப்பப்படுத்தி, உருக்கிய பின், தேவையான வடிவத்திற்கு அவற்றை மாற்றுகின்றனர். அவை குளிர்ந்தபின் மீண்டும் கடினமாகின்றன. இதுவும் ஒரு மீள் மாற்றமே.

மீளா மாற்றம் :

🌾 சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது. இவ்வகை மாற்றங்கள் மீளா மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

🌾 சோறு சமைத்தல், சோறு சமைத்தலில் சோறு மீண்டும் அரிசி ஆகுமா? ஆகாது. எனவே இது மீளா மாற்றம் ஆகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக