வெள்ளி, 31 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013 தாள் - I


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I

1. குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது - மன வரைபடம்

2. மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல் - குழப்பத்தை விளைவிக்கும் ஒத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்

3. கற்றலுக்கு உதவும் உளம் சார்ந்த காரணி - வகுப்பறைச் சு%2Bழல்

4. தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள் - இன்சாட் - 1

5. படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது

அ. தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்

ஆ. தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்

இ. சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்கே முக்கியத்துவம் தருதல்

ஈ. தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

விடை: ஈ - தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

6. குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது எதனை வெளிப்படுத்தும் - ஆச்சரிய உணர்வு

7. பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினால் அதிகமாக பாதிப்பவர் - நண்பர்

8. ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - மனப்பான்மை

9. ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே ஒருங்கிணைந்த ஆளுமை (Iவெநபசயுவநனு pநசளழnயுடவைல) என்று கூறியவர் - ஹர்லாக்

10. தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது - நல்லொழுக்கம்

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக