வியாழன், 30 மே, 2019

TET 2019,உளவியல் வினா விடைகள்

TET 2019,உளவியல் வினா விடைகள்

1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்

2. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்கள் - ஏ.குரோ, சி.டி.குரோ

3. நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்

4. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

5. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி

6. ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சனை நடத்தை

7. உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்

8. தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்

9. தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது

10. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

11. நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை .......... என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை

12. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா

13. குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக