TET- 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. புள்ளிருக்கு வேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் பெயர் - முத்துக் குமாரசாமி
2. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் நு}லில் இடம்பெற்றுள்ள வருகைப்பருவம் எத்தனையாவது பருவம் - 6
3. தளர்நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக்கூறி அருகில் வருக வருக என வாய்குளிர மணங்குளிர அழைக்கும் பாடல்களைக் கொண்டது - வருகைப் பருவம்
4. ′மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்′ என பாராட்டப்பட்டவர் - குணங்குடி மஸ்தான் சாகிபு
5. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதிறு
6. தாயுமானவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு ′பராபரக்கண்ணி′யை போல இசுலாமியப் பாடல்களை எழுதியவர் - குணங்குடி மஸ்தான் சாகிபு
7. ஆறுமுக நாவலர் பிறந்த இடம் - நல்லு}ர் (யாழ்ப்பாணம்), இலங்கை
8. ஆறுமுக நாவலர் இயற்பெயர் என்ன? - ஆறுமுகனார்
9. யாருடைய சொற்பொழிவின் வாயிலாக மொழிதிறனையும், வாக்கு வன்மையையும், பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதினத்தார் மகிழ்ந்தார் - ஆறுமுக நாவலர்
10. குணங்குடி மஸ்தான் சாகிபு மேல் கொண்ட பற்றினால் ′நான்மணிமாலை′ ஒன்றை இயற்றியவர் - திருத்தணிச் சரவணபெருமாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக