ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)
1. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?
விடை: வெள்ளிக்கிழமை
தீர்வு:
மாதம் - நாள்கள் எண்ணிக்கை
டிசம்பர் - 12 (31 - 19)
ஜனவரி - 31
பிப்ரவரி - 28 (2018 சாதாரண ஆண்டு)
மார்ச் - 31
ஏப்ரல் - 30
மே - 31
ஜூன் - 07
மொத்தம் = 170 நாள்கள்
170 நாள்கள் = 24 வாரங்கள் %2B 2 நாள்கள்
தேவையான கிழமை புதன்கிழமைக்கு 2வது நாள். எனவே, ஜூன் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை.

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. 6 மு.ப மற்றும் 4 பி.ப-க்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க.
விடை: 10மணி
தீர்வு:
6 மு.ப மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = 06.00 மணி
4 பி.ப. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = (4 %2B 12)மணி = 16.00மணி
6மு.ப. மணிக்கு 4பி.ப. மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளி = 16 மணிக்கும் 6 மணிக்கும் உள்ள வேறுபாடு
= 16.00மணி - 6.00மணி = 10மணி
3. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.
விடை: ரூ.1400
தீர்வு:
விற்பனை விலை = ரூ.1550
இலாபம் = ரூ.150
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
ரூ.150 = ரூ.1550 - அடக்க விலை
அடக்க விலை = ரூ.1550 - ரூ.150
= ரூ.1400
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக