TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I
1. தன்மை வினையாலணையும் பெயர் வந்துள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ) சென்றீரைக் கண்டேன்
ஆ) சென்றேனைப் பார்த்தாயா
இ) சென்றீமைப் பார்த்தாயா
ஈ) சென்றானைக் கண்டேன்
விடை: ஆ - சென்றேனைப் பார்த்தாயா
2. தூதின் இலக்கணம் கூறும் நு}ல் - இலக்கண விளக்கம்
3. வினையெச்ச சொல்லைத் தெரிவு செய்க.
அ) நடந்து செல்
ஆ) நடந்த கன்று
இ) நடக்கின்ற காளை
ஈ) ஓடாக் குதிரை
விடை அ - நடந்து செல்
4. நு}ல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும் என்னும் பாடல் வரிகளை எழுதியவர். - க. சச்சிதானந்தன்
5. இரு திணைகளுக்கும் பொதுவான முறைப்பெயர் எது?
அ) சாத்தன்
ஆ) சாத்தி
இ) தந்தை
ஈ) மக்கள்
விடை: இ - தந்தை
6. நன்னு}ல் கற்றேன். இத்தொடர் உணர்த்தும் ஆகுபெயர் - காரியவாகு பெயர்
7. விடு என்ற வினையடியின் இறந்தகாலத் தன்மை ஒருமை வினைமுற்று எது? - விட்டேன்
8. முதலிரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது? - இணை எதுகை
9. பின்வரும் தொடர்களில் வல்லினம் மிகும் இடத்தைத் தேர்ந்து எழுதுக.
அ) எழுவாய்த் தொடர்
ஆ) வியங்கோள் வினைமுற்றை அடுத்து
இ) அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து
ஈ) இகர ஈற்று வினை எச்சத்தின் பின்
விடை: ஈ - இகர ஈற்று வினை எச்சத்தின் பின்
11. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும் - மேற்காணும் வரிகள் இடம் பெற்ற இலக்கியம்? - பட்டினப்பாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக