திங்கள், 27 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்

உணவு தாவரங்கள்:

🌾 நாம் உணவிற்காக நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, கரும்பு, தென்னை மற்றும் காய்கறிகள் எனப் பலவகைத் தாவரங்களைப் பயிரிடுகிறோம்.

🌾 காய்கறிகள் மட்டுமல்லாமல் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், எண்ணெய் வகைகள், நறுமணப் பொருள்கள் என அனைத்தும் தாவரங்களிலிருந்தே கிடைக்கின்றன.

🌾 உணவுப்பொருள்கள் தொடர்பான தாவரங்கள் நமக்குப் பலவகைகளிலும் பயன்படுகின்றன. வற்றல், ஊறுகாய், பொடி தயாரித்தல், பழக்கூழ் தயாரித்தல் போன்ற தொழில்கள் அனைத்தும் தாவரங்களை நம்பியே உள்ளன.

🌾 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (Mango Pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தத் தொழில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கிறது. மேலும் இவை நாட்டின் வருமானத்தையும் பெருக்குகின்றன.

மருத்துவத் தாவரங்கள் :

🌾 உணவுக்கு மட்டுமில்லாமல் நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன.

🌾 பல நோய்களுக்கு நாம் உட்கொள்ளும் மருந்துகள் அனைத்தும் தாவரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

🌾 மருத்துவக் குணங்கள் நிறைந்த தாவரங்களை நாம் மூலிகைகள் என்று சொல்கின்றோம்.

🌾 நம் நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே தாவரங்களைப் பயன்படுத்தி பலவகை நோய்களைக் குணப்படுத்தி வருகின்றனர். மூலிகைகள் காடுகளிலும் மலைகளிலும் இயற்கையாகவே வளர்கின்றன. நமது ஊரிலுள்ள குப்பைமேடு, சாலையோரப் புதர்களிலும் கூட தானாகவே வளரும் மூலிகைகளைக் காணலாம்.

🌾 நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றார்கள். உண்ணும் உணவில் மருத்துவக் குணமிக்க தாவரங்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டாலே போதும், நோய்களின்றி நலமுடன் வாழலாம்.

மூலிகைகளின் பயன்கள்:

🌾 தூதுவளை : சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும். உடல் பலம் தரும்.

🌾 கீழாநெல்லி : மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.

🌾 வேம்பு : கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பு%2Bச்சிகளை நீக்கும்.

🌾 நெல்லி : வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்.

🌾 துளசி : சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

🌾 கற்பு%2Bரவல்லி : வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

🌾 வசம்பு : வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்.

🌾 மஞ்சள் : கிருமி நாசினி, அழகுபடுத்தல்.

🌾 பிரண்டை : பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்.

🌾 இஞ்சி : செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்.

🌾 மிளகு : தொண்டைக் கரகரப்பை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக