ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. ஆசிரியரின் அன்பு, அரவணைப்பு, பாராட்டு போன்றவை குழந்தைகள் கற்றலில் ஆர்வங்காட்ட உதவும். இச்சு%2Bழல் எவ்விதியினுள் அடங்கும்? - விளைவு விதி
2. குழந்தைகளைப் பாராட்டுவது, அன்பு காட்டி அரவணைப்பது போன்ற செயல்கள் எவ்வகைக் கற்றலைத் தூண்டும்? - ஆக்க நிலையுறுத்தம்
3. பாராட்டுதல், பரிசுப் பொருட்கள் தருதல், விளையாட அனுமதித்தல் போன்றவை எவ்வகைத் தூண்டலை ஏற்படுத்தும்? - வலுவு%2Bட்டும் தூண்டல்
4. உட்காட்சி மூலம் கற்றல் நிகழ்வதை சோதனையின் மூலம் நிரூபித்த அறிஞர் பெயர் - கோலர்
5. சிம்பன்சி குரங்கு எச்சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது? - உட்காட்சி மூலம் கற்றல்

6. எதிர்காலத்தில் பல மேதைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர் எவ்வழிக் கற்றலைப் பயன்படுத்த வேண்டும்? - உட்காட்சி மூலம் கற்றல்
7. எக்கல்வி முறையில் ஆசிரியர் அதிகாரம் படைத்தவராகவும், மாணவர்கள் அவர் சொல்லை பின்பற்றி செய்பவர்களாகவும் இருக்கின்றனர்? - ஆசிரியர் மையக் கல்விமுறை
8. நெடுங்கால நினைவிற்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் பெரிதும் உதவுவது எவ்வகைக் கற்றல்? - அறிவுசார் கற்றல் அணுகுமுறை
9. மீன்குஞ்சு பிறந்த உடனேயே நீந்துவது எவ்வகைக் கற்றல்? - இயல்பு%2Bக்கம்
10. குழந்தைகள் தான் பார்ப்பவர்களைப் போலவே பேசவும், நடக்கவும் முயற்சிக்கிறது. இது எவ்வகைக் கற்றல்? - போலச் செய்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக