ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - இயற்கை வளங்களின் பயன்கள்
🌱 இயற்கை நமக்குத் தருபவை இயற்கை வளங்கள் எனப்படும். தாவரங்கள், விலங்குகள், நீர்வாழ்வன, கனிமங்கள், நீர், காற்று, சு%2Bரிய ஒளி முதலியவை இயற்கை வளங்கள் ஆகும்.
இயற்கை வளங்களை மாற்றி பொருள்களாக்கிப் பயன்படுத்துதல்
🌱 நெல் பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய அரிசி, உமி மற்றும் தவிடு ஆகியவை நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதைப் பற்றி காண்போம்.
🌱 நெல் பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய அரிசியை நாம் உணவாகப் பயன்படுத்துகிறோம்.
இருவகை அரிசி:
🌱 வேகவைக்காத நெல்லின் உமியை நீக்கினால் கிடைப்பது பச்சரிசி. இதில் உமியை நீக்கும்போது சில சத்துக்கள் நீக்கப்படுகின்றன.
🌱 நெல்லை வேகவைத்து உலர்த்தியபின் உமியை நீக்கினால் கிடைப்பது புழுங்கல் அரிசி. இதில் சத்துக்கள் நீக்கப்படுவதில்லை.
கோல்டன் அரிசி:
🌱 இந்தப் புதிய வகை அரிசியில் உயிர்ச்சத்து A உள்ளது. இது பார்வைத்திறனை அதிகரிக்க வல்லது.
🌱 நெல்லின் மேற்புறத்தோலான உமியை நீக்கியே நாம் அரிசியைப் பெறுகிறோம். பொதுவாக உபயோகமற்றது எனக் கருதப்படும் உமி, தவிடு போன்றவைAம் பயனுள்ள பொருள்களேயாகும்.
உமி எரிபொருளாக!
🌱 உமி எரிபொருளாக வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
உமிAம் செங்கல்லும்:
🌱 உமிAடன் சிமெண்டைக் கலந்து தயாரிக்கப்படும் செங்கல் லேசானாதாகவும் வெப்பத்தைத் தடை செய்Aம் தன்மை உடையதாகவும் உள்ளது. இதைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டங்களுக்குள் வெப்பம் குறைவாக இருக்கும்.
உமியிலிருந்து உரம்:
🌱 உமியோடு மண்புழுக்களை வளர்த்தால் வெர்மி கம்போஸ்ட் என்ற மிகச் சிறந்த மண்புழு உரம் கிடைக்கிறது. இது பு%2Bச்செடிகளுக்கு மிகச்சிறந்த உரம் ஆகும்.
நீரைச் சுத்தம் செய்Aம் உமி:
🌱 உமியின் சாம்பல் (Aஉவiஎயவநன ஊயசடிழn) நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. இது நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது.
தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய்:
🌱 தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் வைட்டமின்களும், மாரடைப்பைத் தடுக்கும் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்கப்பட்ட தவிட்டுக்கழிவு மீன் மற்றும் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது.
தெரிந்து கொள்வோம்:
🌱 நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் மீத்தேன் வாA, வளிமண்டலத்தை வெப்பமாக்குவதோடு அசுத்தமும் ஆக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக