செவ்வாய், 21 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012 தாள் - II


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II

1. பொருத்தமானதை தேர்வு செய்க.

அ) காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
ஊசர்

ஆ) செங்கீரை
சிற்றில்
கழங்கு
தால்
காப்பு

இ) தால்
காப்பு
கழங்கு
சிறுபறை
செங்கீரை

ஈ) காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
சிறுதேர்

விடை : ஈ

2. 'உலகம், உயிர், கடவுள்" ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம் - இவ்வாறு கூறியவர்? - திரு.வி.க.

3. 'நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை" என்ற கொள்கை உடையவர்? - முத்து வீரப்பன்

4. 'பொழிப்பு எதுகை" பயின்று வரும் சீர்கள் - 1, 3

5. சரியான இணையை தேர்வு செய்க.

அ) குறிஞ்சி - அகில்
முல்லை - புன்னை
மருதம் - காயா
நெய்தல் - காஞ்சி

ஆ) குறிஞ்சி - புன்னை
முல்லை - காஞ்சி
மருதம் - அகில்
நெய்தல் - காயா

இ) குறிஞ்சி - அகில்
முல்லை - காயா
மருதம் - காஞ்சி
நெய்தல் - புன்னை

முல்லை - புன்னை
மருதம் - காயா
நெய்தல் - அகில்

விடை : இ

6. 'வளையல்" என்னும் பெயர் - காரண சிறப்புப் பெயர்

7. என்பணிந்த தென்கமலை - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் - திருவாரூர்

8. திரைக் கவித் திலகம் என்ற சிறப்பைப் பெற்றவர் - குருவிக்கரம்பை சண்முகம்

9. பு%2Bவின் விவரம் பல கோடி - இப்பாடல் இடம் பெற்ற நாடகம் - சதி சுலோசனா

10. இளமைப் பெயர்களை சரியாக தெரிவு செய்க.

அ) புலி - பறழ்
குதிரை - குட்டி
சிங்கம் - குருளை
மான் - கன்று

ஆ) புலி - குட்டி
குதிரை - கன்று
சிங்கம் - பறழ்
மான் - குருளை

இ) புலி - பறழ்
குதிரை - கன்று
சிங்கம் - குட்டி
மான் - குருளை

குதிரை - பறழ்
சிங்கம் - குருளை
மான் - கன்று

விடை : அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக