TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. திருவருட்பா என்ற நு}லின் ஆசிரியர் யார்? - இராமலிங்க அடிகளார்
2. 'கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்"
'எண்ணில் கலந்தே இருக்கின்றான்" என்ற பாடல் வரியின் சொந்தக்காரர் யார்? - இராமலிங்க அடிகளார்
3. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது? - மருதூர் (கடலு}ர் மாவட்டம்)
4. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் என்ன? - திருவருட்பிரகாச வள்ளலார்
5. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்? - இராமையா - சின்னம்மையார்
6. இராமலிங்க அடிகளார் எழுதிய மற்ற நு}ல்கள் எவை? - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
7. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் யார்? - இராமலிங்க அடிகளார்
8. அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை அமைத்தவர் யார்? - இராமலிங்க அடிகளார்
9. அறிவுநெறி விளங்க ஞானசபையை நிறுவியவர் யார்? - இராமலிங்க அடிகளார்
10. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் எவருடையது? - இராமலிங்க அடிகளார்
11. 1867-ல் இராமலிங்க அடிகளார் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க தருமச்சாலையை எங்கு அமைத்தார்? - வடலு}ர்
12. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் அனைத்தும் ............... என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. - திருவருட்பா
13. இராமலிங்க அடிகளாரின் காலம் - 05.10.1823 முதல் 30.01.1874 வரை
14. 'எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே", 'அவற்றைத் துன்புறுத்தக்கூடாது" என்ற கொள்கை உடையவர் யார்? - இராமலிங்க அடிகளார்
15. வள்ளலார் பதிப்பித்த நு}ல்கள் எவை? - சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக