ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்
கட்டுமான வேலையில் தாவரங்கள் :
🌾 வீடு கட்டவும், நம் வீட்டிலுள்ள கதவு, சன்னல், மேசை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள் தயாரிக்கவும் மரக்கட்டைகள் பயன்படுகின்றன.
🌾 தேக்கு - கட்டுமானம், மரச்சாமான்கள்
🌾 பலா - கட்டுமானம் மற்றும் பழங்கள்
🌾 யு%2Bகலிப்டஸ் - தைலம், காகிதம்
🌾 மா - கட்டுமானம் மற்றும் பழங்கள்
🌾 இலவம் - தீப்பெட்டி, தீக்குச்சி, சிறு பொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணை
🌾 தென்னை - கூரை வேய்தல், கட்டுமானம், இளநீர், தேங்காய்
🌾 பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் தாவரப் பகுதி மரக்கட்டை எனப்படும். தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி வன்கட்டை எனப்படும். தாவரத் தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்.
🌾 மென்கட்டை தாவரத்தில் நீரினைக் கடத்த உதவுகிறது. வன்கட்டை தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது.
🌾 வன்கட்டை மென் கட்டையை விட அதிக உறுதியானது. பு%2Bஞ்சைகள், கரையான்கள் மற்றும் துளையிடும் பு%2Bச்சிகள் வன்கட்டையைப் பெரும்பாலும் சிதைப்பதில்லை.
🌾 வன்கட்டையில் பிசின், ரெஸின், இரப்பர்பால் மற்றும் எண்ணெய் முதலியன காணப்படுவதால், வன்கட்டை கடினத்தன்மையையும், பு%2Bஞ்சைகளை எதிர்க்கும் தன்மையையும் பெற்றுள்ளது.
🌾 மேலும் வன்கட்டை பொதுவாக அதிக மெருகேறும் தன்மையுடையது. எனவே, கட்டுமானப் பணிகளுக்கு இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
🌾 பு%2Bஞ்சைகளும், கரையான்களும் மென்கட்டையை அதிக அளவில் சிதைக்கின்றன. நமது ஊரைச் சுற்றிப் பல்வேறு மரங்கள் வளர்கின்றன. அவற்றின் பயன்பாடுகளை அறிந்து கொள்வது வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும்.
இயற்கை தந்த பரிசு - தாவரங்கள்
🌾 செடி, கொடி, மரம் இவை அனைத்துமே நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அளிப்பதில் தாவரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழை பெய்ய காடுகள் தேவை. மரங்கள் காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன.
🌾 வில்லோ - விளையாட்டுப் பொருள்கள், கிரிக்கெட் மட்டை
🌾 கருவேலம் - மாட்டு வண்டியின் பாகங்கள்
🌾 சந்தன மரம் - சந்தனம், கலைப் பொருள்கள், மரப்பொருள்கள்
🌾 மல்பரி - டென்னிஸ், ஹhக்கி மட்டைகள்
🌾 பைன் - இரயில் படுக்கைகள், படகுகள்
சில தகவல்கள் :
🌾 தென்ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள போபாப் என்னும் மரத்தின் 47 மீட்டர் சுற்றளவுள்ள தண்டுப்பகுதி 1,20,000 லிட்டர் தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது.
🌾 பழமரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். இது 400 ஆண்டுகளுக்கு ஆரஞ்சு பழங்களைத் தருகிறது.
🌾 மிகப்பெரிய பு%2Bப்பு%2Bக்கும் தாவரம் ராஃப்லேசியா. இதன் பு%2Bவின் விட்டம் 1 மீட்டர்.
🌾 செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்கள் 115 மீட்டர் உயரம் வரை வளரும்.
🌾 ஒரு தர்ப்பு%2Bசணிப்பழம் இருந்தால், அதிலிருந்து 6,00,000 தர்ப்பு%2Bசணிச்செடிகளைப் பயிர்செய்து, 180 டன் எடையுள்ள தர்ப்பு%2Bசணிகளைப் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக