ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - நீர்
🔹 மழைக்காலத்தில் வரும் மிகுதியான நீர் குளம், ஏரி, கண்மாய் முதலியவற்றில் தேக்கிவைக்கப்படுகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டுகளிலும் நீர் தேக்கிவைக்கப்படுகிறது.
🔹 அவ்வாறு தேக்கிய நீர் வறட்சிக்காலங்களில் ஏற்படும் நீர்த்தட்டுப்பாட்டைக் குறைக்கிறது.
🔹 மழைநீர் சேமிப்புத் தொட்டி மூலம் மழைநீரைச் சேமிக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
🔹 அனைத்து வகையான குடியிருப்புகளின் மேற்கூரையிலிருந்து வரும் மழைநீரை முறையான சேமிப்புத் தொட்டியின் மூலம் நிலத்திற்குள் பாய்ச்சி சேமிக்கலாம்.
🔹 இதன்மூலம் தண்ணீர்ப் பற்றாக்குறையை எளிதாகக் குறைக்கலாம்.
தெரிந்துகொள்வோம்:
🔹 நீரைச் சேமிக்கும் பொருட்டுப் பல நு}ற்றாண்டுகளுக்கு முன்னரே கரிகால் சோழன் காவிரியின் குறுக்காகக் கல்லணையைக் கட்டினார்.
நீர்த்தட்டுப்பாடு
🔹 உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே விதமான தட்பவெப்பநிலை இருப்பதில்லை. கோடைக்காலத்தில் வெப்பம் கூடுவதால் ஆறு, ஏரி, குளம், கிணறு மற்றும் நிலத்தடி நீரின் அளவு குறைகிறது.
🔹 நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒவ்வொரு நாளும் குடிநீருக்கும் இதர பயன்பாட்டிற்கும் நீரின்றி அல்லலுக்கு உள்ளாகின்றனர்.
🔹 ஆண்டின் எல்லா மாதங்களிலும் மழை பெய்வது இல்லை. மழை பெய்யாத மாதங்களில் வெயிலின் வெப்பம் கூடுதலாக இருக்கும்.
தண்ணீர்த் தட்டுப்பாடும் பாதிப்புகளும்
குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போவதால்
🔹 பணம் கொடுத்துக் குடிநீரை வாங்குதல்.
🔹 குடிநீருக்காகக் காலிக் குடங்களுடன் காத்திருத்தல்.
🔹 குடிநீரைப் பெற நெடுந்தொலைவு செல்லுதல்.
🔹 வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புகளுக்கு வருதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
தண்ணீர் சிக்கனம்
🔹 கழிவு நீரைத் தோட்டத்திற்குப் பாய்ச்சலாம்.
🔹 தோட்டங்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் செடிகளுக்கு நீர் பாய்ச்சலாம்.
🔹 பு%2Bவாளி மூலம் தாவரங்களுக்கு நீர் ஊற்றலாம்.
நீரைப்பாதுகாத்தல்
🔹 நீரின் பயன்பாடு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
🔹 தூய்மையற்ற குடிநீரால் காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு எனப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிப்பதன் மூலம் நோய்களைத் தவிர்க்கலாம்.
🔹 நாம் குடிக்கும் நீரை மாசுபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.
பாதுகாப்பான குடிநீர்
🔹 குறிப்பிட்ட அளவில் குளோரின் கலந்து தூய்மைப்படுத்திய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தலாம்.
🔹 குடிநீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தல் இன்றியமையாதது. அதனால், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
🔹 குடிநீர்ப் பாத்திரம் தூய்மையாக இருந்தல் வேண்டும்.
🔹 குடிநீரை எப்பொழுதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக