புதன், 29 மே, 2019

TET - 2019 புவியியல் வினா விடைகள்


TET  - 2019
புவியியல் வினா விடைகள்

1. நெல், கரும்பு போன்றவை ----------- பயிர்களாகும். - நன்செய்

2. சிறு தானியங்கள் ------------ பயிர்களாகும். - புன்செய்

3. தமிழகத்தில் தோட்ட பயிராக ------------ சாகுபடி செய்யப்படுகிறது. - தேயிலை, காபி, இரப்பர் மற்றும் மிளகு.

4. கலப்பு விவசாயம் என்பது என்ன? - கலப்பு விவசாயம் என்பது பல பயிர்களை வளர்ப்பதுடன் கால்நடை, மீன், தேனீ மற்றும் பறவைகளையும் வளர்க்கும் முறையாகும்.

5. சித்திரைப் பட்டத்தின் வேறு பெயர் - கரீப்

6. ஜூலை மாதத்தில் விதைத்து ஜனவரியில் அறுவடை செய்யப்படும் பருவம் ------------- - சம்பா பருவம்

7. விவசாயத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை? - மண் வகை, தட்ப வெப்பம், மழை அளவு, ஈரப்பதம், நிலத்தின் சரிவு.

8. தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள் - சொர்ண வாரி - சித்திரைப் பட்டம், சம்பா பருவம் - ஆடிப்பட்டம், நவரைப் பருவம் - கார்த்திகைப் பட்டம்

9. உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மைத் திட்டம் --------------- - கல்லணை கால்வாய்ப் பாசனம்

10. தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஏரிகள் - செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், மதுராந்தகம், கொளவாய் அம்பத்தூர், கொடைக்கானல், ஊட்டி

11. தமிழ் நாட்டின் முக்கிய பாசன கால்வாய்கள் - பவானி ஆற்றுக் கால்வாய், அரக்கன் கோட்டை, தாடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் கால்வாய்

12. தமிழ் நாட்டின் முதன்மையான உணவுப் பயிர் எது? - நெல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக