ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
விரும்பத்தக்க மாற்றங்கள் மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள் :
விரும்பத்தக்க மாற்றங்கள் :
👉 மழைபொழிதல், பு%2B மலர்தல், காய்கனியாதல் போன்ற மாற்றங்கள் நிகழும் பொழுது அவை நமக்கு பயனுள்ளதாக அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் ஆகும்.
விரும்பத்தகாத மாற்றங்கள் :
👉 உணவு கெட்டுப்போதல், எரிமலை வெடித்தல், இரும்பு துருப்பிடித்தல், கண்ணாடி உடைதல் போன்ற மாற்றங்களை நாம் விரும்புவதில்லை.
👉 ஏனென்றால், அவை நமக்குப் பயனற்றதாகவும், ஆபத்தானதாகவும் அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள் ஆகும்.
கால ஒழுங்கு மாற்றங்கள் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :
கால ஒழுங்கு மாற்றங்கள் :
👉 குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்கள் கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலும் (பருவ நிலை).
எ.கா :
👉 கடிகார ஊசல், நிலவின் பல்வேறு நிலைகள் மற்றும் இரவு பகல் வருதல்
கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :
👉 குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றங்கள் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலாது (நிலநடுக்கம்).
எ.கா :
👉 எரிமலை வெடித்தல், நில நடுக்கம், மண் சரிவு, விபத்து
வெப்பம் உமிழ் மாற்றங்கள் மற்றும் வெப்பம் கொள் மாற்றங்கள் :
வெப்பம் உமிழ் மாற்றங்கள் :
👉 சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் உமிழ் மாற்றங்கள் ஆகும்.
எ.கா :
👉 தீக்குச்சி எரிதல், தூய்மையாக்கி (Detergent) அல்லது சலவைச் சோடா நீரில் கரைதல்.
வெப்பம் கொள் மாற்றங்கள் :
சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் கொள் மாற்றங்கள் ஆகும்.
எ.கா :
👉 குளுக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக