ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - வேலையும் ஆற்றலும்
இயக்கம்
🌱 ஒரு பொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும்போது அப்பொருள் இயக்கத்தில் உள்ளது எனலாம்.
விசை
🌱 பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தாமாக இடம் பெயர்வது இல்லை. பொருள்களை நகர்ந்த அல்லது நகரும் பொருளை நிறுத்த விசை தேவை. விசையின் அளவிற்கு ஏற்ப பொருள்கள் விரைவாகவோ, மெதுவாகவோ நகர்கின்றன.
வேலை
🌱 பொருளின்மீது விசை செயல்பட்டு அதனால் அந்தப் பொருள் நகர்ந்தால், வேலை செய்யப்பட்டது எனலாம்.
🌱 பொருள் ஒன்றைத் தள்ளும்போது அல்லது இழுக்கும்போது நகர்ந்தால் வேலை செய்யப்படுகிறது எனலாம்; நகரவில்லை என்றால் வேலை செய்யவில்லை எனலாம்.
ஆற்றல்
🌱 வேலை செய்வதற்குத் தேவையான சக்தியை ஆற்றல் என்கிறோம்.
ஆற்றலின் வகைகள்
வெப்ப ஆற்றல்
🌱 நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுகிறது. அதனை எரிப்பதால் பெறப்படும் ஆற்றல் வெப்ப ஆற்றல் ஆகும்.
மின் ஆற்றல்
🌱 வீடுகளில் மின் விளக்குகள் எரிதல், மின் விசிறிகள் சுழலுதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும் ஆற்றல் மின் ஆற்றலாகும்.
சு%2Bரிய ஆற்றல்
🌱 சு%2Bரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றல் சு%2Bரிய ஆற்றல் ஆகும். நீர்சு%2Bடேற்றும் கருவி, சு%2Bரிய அடுப்பு, தெரு விளக்கு மற்றும் சு%2Bரிய மின்கல வாகனங்கள் முதலியன சு%2Bரிய ஆற்றலால் இயங்கும் கருவிகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக