ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. மனிதனின் செயல், பேச்சு, புரிதல், காரணமறிதல், முடிவெடுத்தல் முதலியன எதைப் பொறுத்து அமைகிறது? - பொதுமைக் கருத்துச் சார்ந்த கற்றல்
2. கற்போரின் வயதிற்கும் மனதிற்கும் ஏற்ற கற்றல் பொருள்கள் கருவிகளைக் கொடுத்து கற்க உதவுவது ----------- கற்றலாகும். - தொடர் கற்றல்
3. எவ்வகைக் கற்றல் ஒருவனுக்குத் தான் வாழும் சமுதாயத்தின் உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் அவனை அர்ப்பணித்துக் கொள்ள உதவுகிறது? - பிரச்சனையைத் தீர்த்தல்
4. ஒரு செயலை முழுமையாகக் கற்று முடித்த பின்னர் அடுத்த செயலைக் கற்க முன்னேறிச் செல்வது - கற்றல் சேதாரத்தையும், தேக்க நிலையையும் வெகுவாகக் குறைக்கும்
5. எத்திறன் மூலம் சொல்லாட்சித்திறன், இலக்கணம், பேச்சுத் திறன் போன்றவற்றை எளிதில் பெறலாம்? - இணைத்துக் கற்றல்
6. எவ்வகைக் கற்றல் மொழியறிவின் வளர்ச்சிக்கு உதவும்? - இணைத்துக் கற்றல்
7. சமூக வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி, இயக்கத்திறன் வளர்ச்சி போன்றவை எக்கற்றல் மூலம் பெரிதும் நடைபெறுகிறது? - பின்பற்றிக் கற்றல்
8. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் துவக்கம் எக்கற்றலை அடிப்படையாகக் கொண்டது? - பின்பற்றிக் கற்றல்
9. கற்றல் எவற்றைக் கொண்டு நடைபெறுவதாக நடத்தைக் கொள்கையினர் குறிப்பிடுகின்றனர்? - தூண்டல் - துலங்கல்
10. மீண்டும் மீண்டும் பயிற்சியளித்தால் எதை வலுவு%2Bட்டும்? - கற்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக