சனி, 25 மே, 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனச்சிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

2. தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சு%2Bழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்

3. வளர்ச்சியின் பெரும் எல்லையின் பெயர் - முதிர்ச்சி

4. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு

5. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி

6. வயதுகேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் - பினே - சைமன்

7. பயிற்சி மாற்றக் கோட்பாடான குறிக்கோள் கோட்பாட்டை உருவாக்கியவர் - பாக்லி

8. குறுக்கீடுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - மறதி

9. குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை

10. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக